பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ பூசாரியார் சடங்குகளோடு நீராடல்-ஆகிய நிகழ்ச்சிகளோடு நான் பார்த்த எருது ஆட்டம் முடிவுற்றது.” கோவிந்த கோவிந்தா கோவிந்தா" சமநிலத்து மக்களைப்போலவே மலையாளிகளுக்கும் கோவில்-குளம்-பூசாரி-பூசனை முதலியவற்றில் நிரம்ப நம்பிக்கையுண்டு. இறைவன் உறையும் கோயில்களில் தெய்வத்திருவுருக்களைத் தொட்டு வழிபாடு நிகழ்த்தும் உரிமையுடைய பூசாரிகளைத் தேர்ந்தெடுக்க அவர்கள் விந்தையான முறையொன்றைப் பின்பற்றுகின்றார்கள். அதன்படி பூசாரிக்குரிய தேர்தலில் கலந்துகொள்ள அனை வரும் அழைக்கப்படுகின்றனர். அவர்கள் முன்னிலையில் பொதுக் கிணறு ஒன்றில் ஒரு வகை மலர்க்கொத்தைத் துக்குத் தொட்டியாகிய வாளி ஒன்றில் வைத்துக் கிணற்றின் அடிக்குச் செல்லும்படி அனுப்புவர். பூசாரி யாகப் போட்டியிடுபவர் கிணற்றுக்குள் கோவிந்தா - கோவிந்தா - கோவிந்தா” என்று பயபத்தியுடன் மூழ்கி அம்மலர்க்கொத்தைப் பத்திரமாக மேலே கொண்டு வருவர். இப்படி மலர்க் கொத்தை எடுத்து வருபவருக்குத் தான் கோயில் பூசாரி தொழில் கிடைக்கும். இப்படித் தேர்தெடுக்கப்பட்ட பூசாரியையே தங்கள் குலதெய்வங்கள் ஏற்கின்றன என்று இம்மலை மக்கள் கருதுகின்றார்கள்." பாண்டியன் கல் மலையாளிகள் வாழ்புலத்தில் அவர்கள் வரலாற்றோடு தொடர்புடையதாகக் கிடைக்கும் தொல்பொருளியல் தொடர்புடைய பொருள்களுள் ஒன்று பாண்டியன் கல்” ஆகும். இதைப்பற்றி டாக்டர் எர்ன்பில்ஸ் தமது நூலுள் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்." பாண்டியன் கல் ஒரு வகை நினைவுப் பெருங்கற்பேழையே ஆகும். இக்கற்கள் 7. Tamil Lexicon-Vol. 1 1-p. 1199. - 8. இது திரு. தேவராசன் அவர்களின் பச்சை மலையாளிகள் பற்றிய கையெழுத்துப்படி தந்த செய்தி. - 9. இச்சொல் தமிழ்ப் பேரகராதியில் (Tamil Lexicon) இடம் பெறவில்லை. - 10. Dr. O. R. Baron Ehrenfels: Traces of a Matriarchai Civilization among the Kollimalaiyalis (1943), pp. 73-4.