பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ சேர்வராயன் மலையில் கிடக்கின்றன. இக்கற்பேழை களைப் பற்றிய கதைகளும் கருத்துகளும் பெரிய மலை யாளிகளிடையே நிரம்ப வழங்குகின்றன; கொல்லி மலையாளிகளிடம் இல்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலக் கல்லறைப் படிவங் களாகிய இந்த நினைவுப் பெருங்கற்பேழைகளை (Megalithic tomb3) கல் வட்டங்கள் அல்லது செதுக்குறா இரு செங்குத்துக்கற்கள் மேலான தட்டைக்கல் அமைப்புகளால் இனங்கண்டுகொள்ளலாம். சேர்வராயன் மலையில் பல வாய்க் கிடைக்கும் இக்கற்பேழைகளுள் கரடு முரடான வடிவும் பெருங்கற்பாறை மூடியும் கொண்டதாகிய பேழை ஒன்றை டாக்டர் எர்ன்பில்ஸ் அவர்கள் திறந்தபோது அத னுள் சிவப்பு மட்டாண்ட ஒடுகளின் உடைவுகளும், இரும்புக் கருவிகளும், வண்ண மணற்படிவுகளும் இருக்கக் கண்டார். நினைவுப் பெருங்கற்பேழைகளுள் பெரும் பாலும் காணற்குரிய காட்சியே இதுவாகும். சேர்வராயன்மலையில் கிடக்கும் கற்பேழைகளைப் பெரிய மலையாளிகள் பாண்டியன் கல்’ என்றே வழங்கு கின்றனர். அதனுடன் அக்கற்பேழைகளை அமைத்த பாண்டியர்கள் ஒருவகைக் குள்ளர்கள் என்றே அவர்கள் கருதுகின்றார்கள். பெரிய மலையாளிகளுள் சிலர் அக் குள்ளர்கள் ஒரு சாண் அல்லது இருசாண் உயரமே இருந் திருக்கக்கூடும் என்று கற்பனை செய்கின்றனர். மற்றுஞ் சிலர் இக்காலத்துப் பெரிய குழந்தைகள் அளவே அவர்கள் இருந்திருப்பார்கள் என்று எண்ணுகின்றனர். அந்தக் குள்ளர்கள் உழவர்களே என்றும், அவர்கள் மாட்டுக்குப் பதில் முயல்களையே உழவுக்குப் பயன்படுத்தினார்கள் என்றும், கயிறுகட்குப் பதில் புல்லையே பயன்படுத்தி னார்கள் என்றும் பெரிய மலையாளிகள் நம்புகின்றார்கள். ஆறடி நீலமும் நாலடி அகலமும் உள்ள இக்கற்பேழை மூடி களை அந்த ஒரு சாண் அல்லது இரு சாண் உயரக் குள்ளர் களே தூக்கினார்கள் என்றும் பெரிய மலையாளிகள் நம்பு கின்றார்கள். ஆனால், உண்மையில் டாக்டர் எர்ன்பில்ஸ் இக்கல்மூடி ஒன்றை நகர்த்த விரும்பியபோது அதற்கு வலிமை நிரம்பிய மூன்று பெரிய மலையாளிகளையே பயன் படுத்த வேண்டியிருந்தது. பெரிய மலையாளிகள் கருத்துப் படி அப்பாண்டியக் குள்ளர்கள் காசு நிரம்பப் படைத்திருந்