பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i{} தாலும் கருமித்தனம் மிகவும் உடையவர்களாம். அதனால், ஒரு நாள் கடவுள் வானத்திலிருந்து பொன்னும் மணியும் மழையெனப் பொழியச் செய்தாராம். அப்போது குள்ளர்கள் அவையனைத்தையும் தாங்களே வாரிக் கொள்ளத் தலை தெறிக்க ஓடினார்களாம். அதைக்கண்ட கடவுள் பேராசைபிடித்த அக்குள்ளர்களை அழிக்கக் கருதி அனல் மழை பொழிந்தாராம். அதிலிருந்து தப்ப எண்ணிய குள்ளர்கள் பெருங்கற்பாதுகாப்புக் குடைவுகளுள் ஒரு சிறிது அடைக்கலம் புகுந்தார்களாம். ஆயினும், வெப்பந் தாங்காமல் முடிவில் வெந்து செத்தொழிந்தார்களாம். இதற்குப்பின் அவர்கள் விட்டுச்சென்ற கற்பேழைகளைத் தவிர வேறெதுவும் அவர்கள் தொடர்பாகக் கிடைக்க வில்லையாம். சேர்வராயன்மலைக்குப் பெரிய மலை யாளிகள் வந்தபோது குள்ளர்கள் பூண்டே இல்லையாம். பாண்டியன் கல்' பற்றிப் பெரிய மலையாளிகள் சொல்லும் வாய்மொழிக் கதை இதுவாக, அப்பெயர் வரலாற்றுக் காலத்துத் தமிழக வேந்தர்களாகிய பாண்டியர் களின் தொடர்பைச் சுட்டிக் காட்டுவது வெள்ளிடை மலை. ஆயினும், பாண்டியன் கல் பாண்டவர் கல்லாயிருக்குமோ என்று ஐயுறுவோரும் உண்டு. பழங்குடி மக்களிடத்தில் - அதிலும் பல கணவர் மணமுறை உடைய குழுக்களுள் - பாண்டவர் - திரெளபதி கதை பெற்றிருக்கும் செல்வாக்குப் பெரிதன்றோ? - மேனரிக்கம் மானிடவியல் ஆராய்ச்சியில் குடும்ப அமைப்பு உறவு முறைப் பாங்கு பற்றிய பகுதி பெருஞ்சிறப்பு வாய்ந்தது ஆகும். அவ்வகையில் மலையாளிகள் குடும்ப அமைப்பில் சிறப்பிடம் பெறும் ஒன்றே மேனரிக்கம்' என்பது. மாமன் மகளை உரிமை பாராட்டி மணக்கும் முறையே மேனரிக்கம்" ஆகும். இது பற்றியும் டாக்டர் எர்ன்பில்ஸ் தமது நூலுள் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார். இம்முறை தாய்வழி உரிமை நாகரிகத்தின் எச்சமோ என்பது அவ் 11. Limișā, W. H. R. Rivers—Social Organization. 12, Tamil Lexicon-Vol. VI-p. 3365