பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# வறிஞரின் ஐயம். இம்மேணிரிக்கம் பற்றிய விளக்கத்திற்கு அண்மையில் திரு. முருகசுந்தரம் அவர்கள் எழுதிய "தமிழகத்தில் குறிஞ்சி வளம் என்னும் நூலில் உள்ள ஒரு சிறு பகுதியை மேற்கோளாகக் காட்டல் சாலும், அது வருமாறு : மேனரீகம் என்பது தமிழ் நாட்டிலும் ஆந்திர நாட்டிலும் பரவலாகக் காணப்படும் ஒருவகை மனமுறை. ஓர் இளைஞ னுக்கு அவனுடைய தாய் மாமன் மகளே ஏற்ற மனப் பெண்ணாகக் கருதப்படுகிறாள். தாய் மாமன் வீட்டில் பெண்ணில்லையென்றால், அத்தை மகள் மனத்தற்கு உரியவளாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறாள். சில சாதியா ரிடையே உடன் பிறந்த தமக்கையின் மகனை மனக்கும் உரிமை போற்றப்படுகிறது. இம்முறைகளின்படி மனக்கும் பெண்ணை உரிமைப்பெண்' என்பர். அதுவும் நிறைந்த செல்வத்தோடும் நில புலன்களோடும் வந்து கணவன் பொருளாதாரத்தை உயர்த்துபவளாக இருந்தால் அவளைப் 'பெருமைப் பெண்' என்றும் கூறுவர். இம்முறைகளை மீறிப் பெண் கொடுக்கவோ, அல்லது பெண் எடுக்கவோ யார் மறுத்தாலும் அச்செயல் பெருங்குற்றமாகக் கருதப் படும். இக்குற்றத்திற்காகச் சாதியை விட்டுக்கூட விலக்கி விடுவதுண்டு. -

மலையாளிகள் இம்மேனரீக முறையை மிகவும் தீவிர மாகக் கடைப்பிடிக்கின்றனர். சில சமயங்களில் இம்முறை விபரீதமாகக் கூடத் தோன்றும். உரிமைப் பெண்ணானவள் குல வழக்கப்படி இவளுக்கென்று குறிப்பிட்ட மணமகனை விட மிகவும் வயதில் முதிர்ந்தவளாக இருப்பதும் உண்டு. நான்கைந்து வயதுடைய இளைஞர்களுக்குப் பருவமெய்திய மங்கையரைத் திருமணம் செய்து வைப்பார்கள். அப்போது மணமகனுடைய தந்தை, தானே பொறுப்பேற்றுக்கொண்டு வம்ச விருத்தி செய்வதுண்டு. தன் மகன் வயதுக்கு வந்ததும் அப்பொறுப்பை அவனிடம் விட்டுவிடுவது தந்தையின் கடமை. பொறுப்பேற்றுக்கொண்ட மகன், தன் தந்தையின் வழியைத் தான் கடைபிடிப்பான். ஓர் இளமணமகனுக்குத் தந்தை இல்லை என்றாலோ, அல்லது தந்தை இருந்தும்

13. Dr. O. R. Baron Ehrenfels: Traces of a Matriarchal civilization among the Kollimalaiyalis (1943)-pp. 56-7 14. திரு. முருக் சுந்தரம் : தமிழகத்தில் குறிஞ்சி வளம் (1962) - - பக்கம் 78 - 9