பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 வெளியே போயிட்டா வேப்பாடி மலை வென்னாடு வேலராயன் பொங்கலாயி வேட்டக்காரன் சுவாமி வேலாண்டி சாமி வேட்டக்காரன் வேளாளன் (வெள்ளாளன்) வேடச்சி வைப்பு வேடன் வைகாசி (வையாசி) வேடி ஜெருகு மலை வேணாடு - இப்பட்டியலை உருவாக்கத் துணை புரிந்த ஏழு சிறந்த நூல்கள் (1-4) சென்னை அரசின் வெளியீடுகளாகிய சேலம், வடவார்க்காடு, தென்னார்க்காடு, திருச்சி மாவ்ட்டப் பல்பொருள் ஆய்வறிக்கைகளும் (5) எர்கார் தர்ஸ்டனின் தென்னிந்திய சாதிகளும் குழுக்களும்” (6) சென்னை மாநில, ஆட்சித்துறைப் பல்பொருள் ஆய்வு நூலும் (7) டாக்டர் எரன்பில்சின் கொல்லி மலையாளிகளும் ஆகும். அச் சேறிய இந்நூல்களோடு சென்னைப் பல்கலைக்கழக மானிடவியல் துறைப் பணியாளர் திரு. ந. தேவராசன் அவர்கள் மானிடவியல் பற்றிச் சற்றேறக்குறைய 300 பக்கங்களில் எழுதியுள்ள நூலின் கையெழுத்துப்படியில் 'பச்சை மலைத் தமிழர் பற்றி 34 பக்கங்களில் அமைந்துள்ள பகுதி பெரிதும் பயன்பட்டது. இவற்றுடன் பேராசிரியர் டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் ‘நன்னனது மலை நாடு பற்றி எழுதியுள்ள அரிய ஆராய்ச்சிக் கட்டு ரையும் நேரில் தெரிவித்த குறிப்புகளும், பேராசிரியர் டாக்டர் மு. வரதராசனார் அவர்கள் வடவார்க்காட்டு மாவட்டத்துச் சவ்வாது மலையாளிகள் பற்றித் தமது நினைவிலிருந்து கூறிய குறிப்புகளும், யான் இரண்டாண்டு கட்கு முன்பு வாணியம்பாடி சென்றிருந்த போது அவ்வூர் இஸ்லாமியக் கல்லூரி மாணவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொண்ட குறிப்புகளும் மேற்கண்ட பட்டியல் படைக்கும் பணியில் உதவியாய் அமைந்தன. - மேற்கண்ட பட்டியலிலுள்ள சொற்கள் மலையாளிகள் தமிழில் உள்ள ஒருசிறு பகுதியே. இச்சொற்களுள்ளும் சில வற்றின் உண்மை உருவும் பொருளும் புலனாகவில்லை. ஆயினும் கிடைக்கும் விளக்கங்களைத் துணையாகக் கொண்டு இச்சொற்களின் வகை-வளம் பற்றி ஆராய்தல்