பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நேப்பாளியில் தமிழ் i பாரதநாட்டின் திருமுடியென விளங்கும் பெருமை ஒரு வகையில் நேப்பாளத்திற்கும், திருவடியென விளங்கும் பெருமை தமிழ் நாட்டிற்கும் உண்டு. புவியியல் வகையில் இத்தகு இணைப்பைப் பெற்றுள்ள இவ்விரு நாடுகட்கும் இடையே உள்ள மொழியியலுறவைச் சிறப்பாக நினை கூற எழுந்ததே இக்கட்டுரை. - பாரத நாட்டின் ஒருமைப்பாட்டிற்கே அடிப்படையான காரணங்கள் இரண்டே. அவை புவியியற்செல்வாக்கும் சமயவியற்செல்வாக்குமே ஆகும். ஒரு வகையில் புவி யியற்செல்வாக்கையும் வலிவும் பொலிவும் பெறச் செய்வது சமயவியற்செல்வாக்கே எனலாம். இவ்வுண்மை தமிழகத் தில் பாசுபத நெறி பரவிய பான்மையால் தெளிவாகும்." இன்றும் நேபாளத்தைக் கண்டு வருவோர் கூறும் வேறு செய்திகள் சிலவும் கருத்திற்கொள்ளததக்கன. அவை இவை: - - 'சிவராத்திரி கழிந்த சில தினங்களுக்குப் பிறகு மீண்டும் கோயிலுக்குச் சென்று பசுபதி நாதரைத் தரிசித்தோம். அங்குப் பூஜை செய்யும் குருக்கள்மாருள் ஒருவர் கன்னட பாஷைக்காரர் என்று கூறினார்கள். 'இந்துக்களிலே சைவம், வைணவம் என்ற பிரிவுகள் இருக்கிறதல்லவா? இந்தப் பிரிவுகளிலே சைவந்தான் நேபாளத்தில் ஆட்சி செலுத்துகிறது. விக்கிரகம் ஒன்றைப் பார்த்தோம். ஒரே செம்பு விக்கிரகத்தில் பாம்பின்மேல் கருடன், கருடனுக்குமேல் விஷ்ணு, விஷ்ணுவின்மேல் சிவ