பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/38

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31 பெருமான் இம்மாதிரியாகக் காணப்பட்டது. நேபாளத்தில் பிள்ளையார் கோவில்கள் அதிகம். வீதிக்கு வீதி, மூலைக்கு மூலை பிள்ளையார் கோவில்கள்தான். நேபாளப் பிள்ளை யாருக்குத் தும்பிக்கை நேராயிருக்கும். நேபாள நடராஜர் மீசை வைத்துக்கொண்டிருக்கிறார்! "

'பசுபதிநாதருடைய கர்ப்பக் கிரகம் நான்கு வாயில் களை உடையது. ...... ... எதிரே நின்ற கோலத்தில் எழுந் தருளியிருக்கிறார் நந்தி. கோயில் மரத்தால் அமைக்கப் பட்டது. மலையாளத்துக் கோவில்க்ளைப் போல அடுக்கு நிலைகள் அமைந்ததாக விமானம் அமைக்கப்பட்டிருக் கிறது.” ※ பெருமான் இந்த நிலையில் நேபாளத்தில் எழுந்தருளி யிருந்து எல்லா உயிர்களையும் காத்து அருள் வழங்கி நிற்கிறான். தென்னாடுடைய சிவன் எந்நாட்டவர்க்கும் இறைவன் என்ற முழக்கத்தின் திருவுருவாகப் பெருமான் அங்கே எழுந்தருளியிருக்கிறான். உலகப் பகுதிகள் எல்லா வற்றிலும் அவனுடைய கருணைப் பெருவெள்ளம் பெருகி நின்று காத்து வருகிறது என்பதற்கு எடுத்துக்காடடாக எல்லாத் திசைகளையும் பார்க்கும் திருமுகங்கள் நான்கும், அருவ நிலையில் ஒரு முகமும் ஆக ஐந்து திருமுகங்கள் கொண்டு விளங்குகிறான். இதேபோன்ற திருவுரு தமிழ் நாட்டில் திருவக்கரை என்னும் தலத்தில் அமைந்திருக்கிறது." حاخته গ্ৰন্থ 'அநந்த பத்மநாச அடிகளிடம் இரண்டாநாள் இரவு பேசிக் கொண்டிருக்கும்போது நேபால நாட்டிலுள்ள இக் கோவிலுக்குத் தாங்கள் எப்படிப் பூசகராக வந்து சேர்ந் தீர்கள்? வடகன்னட நாட்டுத் திருக்கோகர்ணத்திலிருந்து இங்கு வரக் காரணம் என்ன? அங்கே உங்களுக்குப் பூசை முறை இருப்பதாகத் தெரிகிறதே என்று பொழுதுபோக்காகச் சில கேள்விகளைக் கேட்டு வைத்தேன். அடிகள் : உண்மைதான். வடகன்னட நாட்டில் பிராமண வகுப்பில் எங்களுக்கு நல்ல மதிப்புண்டு. நாங்கள் தமிழில் வழங்கும் அடிகள் என்ற சிறப்புப் பெயரைப் பெற்று வாழ்கிறோம். பட், சாஸ்திரிகள் என்ற சிறப்புப்