பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33 2 தொன்றுதொட்டு நேப்பாளத்திற்கும் நமக்கும் உள்ள நல்லுறவை இன்றும் நமக்குச் சிறப்பாக நினைவுபடுத்தும் சீர்மை அந்நாட்டின் தலைநகரின் பெயராகிய காட் மண்டி'ற்கே உண்டு. காஷ்ட மண்டபமே காட்மண்டு. காஷ்டம் தமிழ்க் கட்டையே எனில்" நேப்பாளத்தின் தலைநகரின் பெயருக்கே உயிர் தரும் ஒரு சொல் தமிழ்ச் சொல்லே. இன்னொரு வகையான நம் கால உறவு வீரம் செறிந்த அந்நாட்டின் குடி மக்களாகிய கூர்க்கருள் 245 மகளிர் உட்பட 1325 பேர் தமிழ் நாட்டில் பெரும்பாலும் பண்டை யவனர் போலக் காவலாளிகளாய் வாழ்வதே ஆகும்." - - 3 - தென்னகத்துடன் இத்தகு தொடர்புடைய நேப்பாளத் தின் மொழியாகிய நேப்பாளியின் முதற்பெருஞ்சொற் களஞ்சியம் 1930-ஆம் ஆண்டில் வெளி வந்தது. அதன் ஆசிரியர் பேராசிரியர் டர்னர் (R. L. Turner). ஏறத்தாழ ஆயிரம் பக்கங்கள் கொண்ட இச்சொற்களஞ்சியம் பல வகைகளிலும் எடுத்துக்காட்டானதொரு சொற்களஞ்சிய மாய்த் திகழும் பெருமை சான்றது. இச்சொற்களஞ்சியத்தில் உள்ள இருபத்தாறாயிரம் நேப்பாளிச் சொற்களும் அவற்றிற்குரிய தேவநாகரி எழுத்திலும் ஆங்கில எழுத்திலும் தரப்பட்டுள்ளன. அவற்றிற்குரிய பொருள் ஆங்கிலத்தில் தரப்பட்டுள்ளது. பெரும்பாலும் ஒவ்வொரு நேப்பாளிச் சொல்லின் வேர் பற்றிய ஆய்வும் அச் சொல்லிற்குரிய ஒப்புச் சொற்களும் காட்டப்பட்டுள்ளன. நேப்பாளி ஒப்பியல் - பிறப்பியல் சொற்களஞ்சியம்’ என்ற பெயருக்கு ஏற்ற பெருமைசான்ற இப்பெருநூலைப் பேராசிரியர் டர்னர் பதினாறாண்டுகள் பாடு பட்டு உரு வாக்கியுள்ளார்." இப்பெரும் படைப்புக் கருக்கொண்ட இடம் அல்மோராவின் (Almora) கூர்க்காக் கோட்டையின் அடிவாரம்' பேராசிரியர் டர்னர் கடும்போர்ப்பணியில் ஈடு பட்டிருந்த காலம் இச்சொற்களஞ்சியம் சூல் கொண்ட காலம்.' - 4 நேப்பாளியில் வழங்கும் தமிழ் வேருடைய சொற்கள் சிலவற்றின் அகர வரிசை வருவாறு: 3