பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 6 மேற்கண்ட பட்டியலில் உள்ள நேப்பாளிச் சொற்கள் பல தமிழ் வேருடையனவே என்று நாம் உணரப் பேராசிரி யர் டர்னரே மேற்கோளாகக் காட்டும் பேராசிரியர் யூல் பிளாக் அவர்களின் கருத்துகள் சிலவற்றை மேலுள்ள பட்டியலில் உள்ள சொற்களின் அகர வரிசைகளைத் தழுவியே ஈண்டு முறைப்படுத்தியிருத்தல் பொருத்தமும் பயனும் உடையதாகும். அவ்வாறு முறைப்படுத்தப்பட்ட கருத்துகள் வருமாறு: ஒக்லி : சோமா இலையை இடிக்கும் உரல் உலூக்கல ரிக் வேதம் 1, 28, 6). இது உலக்கை (தமிழ்), வஸ்க் (தொதுவர் தொதுவர் மொழி), ஒனகே (கன்னடம்) ஆகிய திராவிடச் சொற்களை நினைவூட்டுகிறது. கர் : - சிறு உடல் நோய்கட்கும் அவர்கள் (ஆரியர்கள்) திராவிட மொழிச் சொற்களையே வழங்கியதாகத் தோன்று கிறது. கண்ட (ஐத்திரேயம்) கட்டா”, “கடுவு (தெலுங்கு), கட்டெ (கன்னடம்), கழலை (தமிழ்), கட்டு (தெலுங்கு) ஆகிய சொற்களும் ஒரே வேருடையனவே ஆகும்'. காலோ: காஜல் : 'கால என்னும் பகுதியே கருமை என்ற பொருள் தரும். கன்னட - காடு, தெலுங்கு - கரா, கறுப்பாக்க என்னும் பொருள் தரும் கன்னட 'கழ்கு', கரும்பொருளைக் குறிக்கும் கோண்டி - கோசோ, பொதுவாகத் திராவிட மொழிகட் குரிய கார் ஆகிய சொற்களின் வேராக இருத்தல் வேண்டும். இதே சொற்குடும்பத்தைச் சார்ந்ததே கன்னடகாடிகெ, தெலுங்கு - கடி.கெ. இச்சொற்கள் சமஸ்கிருதம் - கஜ்ஜல, இந்தி - காஜல், காலிக் ஆகிய சொற்களை நினை வூட்டும்.” குட்னு : பேராசிரியர் கிட்டல் குடு (கன்னடம்), குட்டு (கன்னடம், தமிழ்) கொட்டு (தெலுங்கு) ஆகியவற்றை ஒப்