பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 பிட்டுக் காட்டுகிறார். இதனுடன் அரிசி குற்றுதல் என்னும் பொருள் தரும் கொட்டு (கன்னடம், தெலுங்கு), நொறுக்கு என்னும் பொருள் தரும் கோர்ஸ்', 'கோஸ்’ (குருக்கு) ஆகிய சொற்களையும் சேர்த்துக் கொள்ளலாம்.' கெர்னு : 'சுற்றளவு என்னும் பொருள் தரும் கேர் (இந்தி), மயக்கம் என்னும் பொருள் தரும் கிர்னி (இந்தி), கெரீ (மராத்தி), கழல் என்னும் பொருள் தரும் கிர்த்தி (மராத்தி) கயிறுகளைச் சுற்றும் சக்கரம் என்னும் பொருள் தரும் கிரின் (இந்தி) போன்ற இன்னும் பல இதே வேருடைய சொற்கள், சுற்று என்னும் பொருள் தரும் கிரி (தெலுங்கு) சுற்றாய், மயக்கமாய் என்னும் பொருள் தரும் கிரகிரா’ (தெலுங்கு) ஆகிய சொற்களை நினைவூட்டுகின்றன. கிறு கிறு என்னும் தமிழ்ச்சொல்லின் பொருளே இவற்றின் பொருளும். குருக் மொழியில் விரைவுறு என்னும் பொருள் தரும் சொல் கிர்கிர்'; பிராகுவியில் உறக்கத்தால் கிறங்கு என்னும் பொருள் தரும் சொல் கிட்’. உண்டா : 'உரிச்சொற்களைப் பொறுத்த வரையில் பெரிதும் வழக் குடைய ஒரு சொல்லைப்பற்றி மட்டும் குறிப்பிட்டு அமை வேன். குளிர்ச்சி என்னும் பொருள் தருவனவாய தண்ட் (மராத்தி), இந்தி, டண்டா ஆகிய சொற்கள் உள்ளன. இவை குளிர்ச்சி என்னும் பொருள் தரும் தண்' (தமிழ், கன்னடம்), தாண்ட் (தொதுவம்), ஈரம் என்னும் பொருள் தரும் தடி (தெலுங்கு, கன்னடம்) ஆகிய சொற்களின் வேரி னும் வேறானவையாக இருக்கவே இயலாது. இச்சொல் திராவிட மூலம் உடையதாவதற்கு இவ்வேரினின்றும் எழுந்த திராவிடச்சொல் வடிவங்களின் வகை வளமும் முக் கொலியின் மாறுதலுறும் பண்பும் பெருந்துணை புரிவன வாகும். 'இச்சொல் குடியேற்ற நாட்டு ஆங்கிலத்திலும் குடி புகுந்துவிட்டது. மிளகுத் தண்ணிர் என்பதில் உள்ள "தண்ணிர் என்பதற்குரிய பழம்பொருள் தண்ணிய (குளிர்ந்த) நீர் என்பதே ஆகும். இக் கூட்டுச் சொல்லில் உள்ள முதற்பகுதியைக் கடனாகப் பெற்றதன் பயனே இந்தி டண்டா”வும் சமஸ்கிருத நீரம்’ என்ற சொல்லும்.'