பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 கிடு, கூராக்கு என்னும் பொருள் தரும் மசெ’, மசகு' (கன்னடம், கோது, தேய் என்னும் பொருள் தரும் மசம சார்’ (குருக்கு), சாணைக்கல் என்னும் பொருள் தரும் ‘மசோல் (கோண்டி) என்னும் சொற்கள் உள. நசுக்கு என்னும் பொருள் தரும் மசல்னா (இந்தி) திராவிடத்தி னின்றும் நேரே ஆரியத்தில் குடி புகுந்திருத்தல் கூடும். ஹலிது, ஹலுகா : கிளர்ச்சியுறு' என்னும் பொருள் தரும் ஹில்னா (இந்தி), ஹல்ணே (மராத்தி), ஹால்வு (குசராத்தி), போக என்னும் பொருள் தரும் ஹல்னு (சம்ஸ்கிருதம்), உலுக்கு என்னும் பொருள் தரும் ஹல்னா (பிரிஜி), ஹால்னா (இந்தி) அலராவுன் (காஷ்மிரி) ஆகிய சொற்களின் சுற்றமாய சொற்கள் பல உள. எடையற்ற என்னும் பொருள் தரும் ஹலு ஹல்கா (இந்தி) சொற்களும் இங்குச் சேர்த்து எண்ணத்தக்கன. அவ்வாறே அலை என்னும் பொருள் தரும் ஹல்கா, ஹில்க், கில்கோரா ஆகிய பெயர்களும் கருதத் தக்கன. திராவிடத்தில் கிளர்ச்சி செய்' என்னும் பொருள் தரும் வினைச்சொற்கள் பலவுள. அவை அலெ (கன்னடம்), அலை (தமிழ்), அலுகு (கன்னடம்), அலங்கு (தெலுங்கு) அசைக்க என்னும் பொருள்தரும் அலகு, அலசு (கன்னடம்) தொந்தரை தருதல் என்னும் பொருள்தரும் அலசு (தெலுங்கு) ஒளி, நிறை, புலமை ஆகிய பொருள்தரும் அலக்கனா (தெலுங்கு), சுறுசுறுப்பு அல்லது விரைவு என்னும் பொருள்தரும் எலகி (கூய்), அலை என்னும் பொருள்தரும் அலா’ (தெலுங்கு) அலெ (கன்னடம்), அலை (தமிழ்) ஆகிய சொற்கள் கருதத்தக்கன.” ஹெர்து : - 'பிராகிருதத்திலும் இக்கால இந்தோ - ஆரியத்திலும் 'பார்க்க என்னும் பொருள் தரும் ஹெர்' என்னும் வேர் இருக்கக் காண்கிறோம். இது ஹிர் (பிராகு), ஏர் (குருக்கு), ஹீர் (கோண்டி), இரு (தெலுங்கு ஆகிய வடதிராவிடப் பேச்சுகளில் இருக்கக் காண்கிறேன் .' இவ்வாறு பேராசிரியர் பிளாக் விளக்கும் கருத்துகளால் தெளிவாகும் உண்மை ஒன்று உண்டு. அது மேற்படி சொற்கள் திராவிடக் கடன் சொற்களே என அவர் துணி