பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதியாரின் பழந்தமிழ் Í கவியரசர் சுப்பிரமணிய பாரதியார் இக்காலத் தமிழ்க் கவிஞர். அவர் புதுவைக் கவிஞர்; புதுமைக் கவிஞர்; புரட்சிக் கவிஞருங்கூட. பட்டிக்காட்டானும் பாட்டுக்கொரு புலவன் பாரதியடா!' என்று பாராட்டும்படி இன்பத் தமிழ்ப் பாடல்களை எல்லோர்க்கும் விளங்கும் எளிய நடையில் இயற்றிய பெருமை பாரதியாருக்கு உண்டு. அவரே எட்டையபுரம் அரசருக்கு எழுதிய ஒலைத்துக்கு ஒன்றில் தமது கவிதையைப் பிறநாட்டார் போற்றும் பான்மையைம் புலப்படுத்தியுள்ளார். அது வருமாறு: சுவைபுதிது, பொருள்புதிது, வளம்புதிது சொற்புதிது சோதி மிக்க நவகவிதை, எந்நாளும் அழியாத மகாகவிதை,” என்று நன்கு பிரான்ஸென்னும் சிறந்தபுகழ் நாட்டிலுயர் புலவோரும் பிறரு மாங்கே விராவுபுக ழாங்கிலத்தில் கவியரசர் தாமுமிக வியந்து கூறிப் பராவியென்றன் தமிழ்க்கவியை ம்ொழிபெயர்த்துப் போற்றுகின்றார்............ 93 இவ்வடிகளிலிருந்து பாரதியார் எத்தகைய புதுமைக் கவிஞர் - எத்தகைய புதுமைக் கவிஞராய் விளங்க அவரே

  • கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை-மலரும் மாலையும் (1964) -பக்கம்-26

பாரதி நூல்கள்-கவிதை (சென்னை அரசு வெளியீடு)பக்கம்-304