பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47 விரும்பினார் - என்பது வெளிப்படும். தம் பாடல்களில் சுவை, பொருள், வளம் மட்டுமன்றி, சொல்லும் புதிதே என்று பிற நாட்டார் போற்றுகின்றனர் என்று அவர் பேசு கிறார். அப்படியானால், அவர் பாடல்களில் பழஞ் சொற்களே இல்லையா? என்ற வினாவிற்கு விடையே இவ்வாராய்ச்சிக் கட்டுரை. இலைமறைகாய் போல அவர் பாடல்களில் எத்தனை எத்தனை இலக்கியச் சொற்கள் - பழந்தமிழ்ச் சொற்கள் - கல்வியறிவும் கேள்வி அறிவும் கடுகளவும் இல்லாத தமிழ்மகன் ஒருவன் எள்ளளவும் உண்மைப்பொருள் விளங்கிக்கொள்ள இயலாத அருந் தமிழ்ச் சொற்கள்-அடங்கியுள்ளன என்பதை எடுத்துக் காட்டுவதே இக்கட்டுரையின் குறிக்கோள். பழந்தமிழ்ப் பாடல்களில் உள்ள பழகுதமிழ்ச் சொற் களையும், பழகுதமிழ்ப் பாடல்களில் உள்ள பழந்தமிழ்ச் சொற்களையும் ஆராயும் ஆராய்ச்சி தரும் இன்பமும் பயனும் தனிச்சிறப்பு வாய்ந்தவை என்பதை அறிஞர் அறிவர். அவ்வகையில் பாரதியார் பாடல்களில் எடுத்துக் காட்டாய்ப் பார்க்கலாகும் 575 பழஞ்சொற்களின் - சொற் றொடர்களின்-அகரவரிசை வருமாறு. 2 அகழ்ந்து 40 அவனி 330 அகற்றினார் 245 அவிர் 274 அஞ்சல் 48 அவிரும் 274 அஞ்சிலாய் 27 அளவளாய் 564 அஞ்சுகிலேன் 238 அளி = வண்டு 147, 483 அடல் 580 அளித்தனர் 459 அடவி 483 அறம் 492 அண்ணல் 523 அறிவை 298 - அணிகள் 48 அறைய = சொல்ல 341 அந்தணர் 447 அன்றி 492 அம்புவி 453 அன்ன 51, 310 அரி = சிங்கம் 21 அணை 11 அரிய 12 அருந்திறல் 31, 55 ஆக்கை 555 அல்லை 540 ஆங்கண் 270, 301 அலந்தோம் 15 ஆடவன் 579 s சொற்களை அடுத்து உள்ள எண்கள் சென்னை அரசின் பாரதி நூல்கள்-கவிதை நூலில் உள்ள பக்கங்களைக் குறிக்கும்.