பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55 இயல்பு. இவ்வுண்மைக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டே மக்கட்புலவர் மகாகவி பாரதியார் பாடல்களில் காணப்படும் மேற்கண்ட பழஞ்சொற்கள்- சொற்றொடர்கள். பாரதியார் பாடல்கள் இன்பத் தமிழிலக்கிய வரிசையில் ஏறுபோலத் தலைநிமிர்ந்து நிற்கத் தகுதி தருவன அச்சொற்கள்-சொற் றொடர்கள். அருந்தமிழ் வல்லாரும் அல்லாரும் பாரதியார் பயன்படுத்திய சொற்களா இவை' என ஐயுறவும் வியப் புறவும் இன்புறவும் செய்யுள் அவற்றுள் பல சங்கச் சொற்கள் என்பதும் இன்னும் பல இடைக்கால இலக்கியச் சொற்கள் என்பதும் கருதத்தக்கன. இது பற்றிய மேலும் விரிவான தனி ஆராய்ச்சி வரவேற்கத்தக்கது.