பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 களும் கடிதங்களும் சிலம்புச்செல்வரின் சிந்தனைச் செல் வாக்குச் சான்றுகள் எனலாம்." ஈண்டு பேரறிஞர் அண்ணாவுக்கும் ரா. பி. சே.வுக்கும் இருந்த இணக்கத்தினும் அண்ணாவுக்கும் மு. வ. வுக்கும் இருந்த இணக்கம் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பற்றிய பல செய்திகளை எழுதி வைக்காமல் பேராசிரியர் மா. கி. தசரதன் மறைந்தது பேரிழப்பாகும். பேராசிரியர்கள் ரா. பி. சே. மு. வ. இருவரிடமும் அவர்கள் காலத்துத் தேசிய இயக்கமும் நீதிக்கட்சி - திராவிட இயக்கங்களும் பெருந்தாக்கம் செலுத்தின எனக் குறித்தல் தவறாகாது. தீருமுறை பேராசிரியர் ரா. பி. சே. இராசாசிக்கு (1940 களில் கூட இராசாசி கூட்டங்களில் தலைவர் அவர்களே!’ என்றழைக்காமல் அக்கிரா சனாதிபதி அவர்களே!’ என்று விளித்துப் பேசியதை நானே கேட்டுள்ளேன்). மறுப்புத் தெரிவிக்கும் வகையில் மிகையாகாது’ என்ற செந்தமிழ்ச் சொல்லைப் பன்முறை பயன்படுத்தியது நினைவுக்கு வருகிறது. அவ்வாறே இராசாசி ஒருமுறை (திரு மீ. ப. சோமு அவர்கள் சாகித்திய அகாதமி விருது பெற்றதற்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் பேசும்போது) மு. வ. வின் பேச்சைக் கேட்டுவிட்டுப் பாதிரியார் பேசுவது போல இருக் கிறது!’ என்று குறிப்பிட்டதாக திரு சோமு வாயிலாகவே கேள்விப்பட்டது நினைவுக்கு வருகிறது (டாக்டர் மு. வ. திருப்பத்துர் கிறித்துவக் குல ஆசிரமத்தில் உருவாகியவர் என்பது நினைவு கொள்ளத்தக்கது). ரா. பி.சே. யை விட மு. வ. வின் எழுத்துகளில்-சிறப் பாகப் புதினங்களிலும் கட்டுரைகளிலும் கடிதங்களிலும் - gudsårsolo, Gurglasol-6Dudë (Socialism/Communism) . தாக்கம் இருத்தல் கவனிக்கத்தக்கது. இதுவும் காலத்திற் கேற்ப இரு பேராசிரியர்களின் கருத்துகளும் கனிவு பெற்றன என்பதற்குரிய சான்றாகக் கொள்ளலாம். இக்கருத்தோடு இயைபுடைய இன்னொரு கருத்து: ரா. பி. சே., மு. வ. இருவரும் திரு. வி. க.விடம் பெருமதிப்பு கொண்டவர்கள். இதன் விளைவே. ரா. பி. சே. தமது தலை சிறந்த ஊரும் பேரும்' என்ற தமிழ் வளர்ச்சிக்கழகப் பரிசு