பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59 பெற்ற ஆய்வு நூலுக்குத் திரு. வி. க. விடம் முகவுரை (1946) பெற்றதும் டாக்டர் மு. வ. தம் நூல்களுள் தலைசிறந்த திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம் என்ற தமிழ் வளர்ச்சிக் கழகப் பரிசு பெற்ற நூலுக்கு மட்டும் திரு. வி. க. விடம் அணிந்துரை (1948) பெற்றதும், (டாக்டர் மு. வ.வின் தமிழிலக்கிய வரலாற்றுக்குப் பேராசிரியர் டாக்டர் தெ. பொ. மீ. அணிந்துரை தந்தமைக்குச் சாகித்திய அகாதமி காரணம் ஆகலாம். ஏனெனில் அந்நூல் டாக்டர் மு. வ.வின் தனி வெளியீடு இல்லை. எனினும் பேராசிரியர் டாக்டர் தெ. பொ. மீ., டாக்டர் மு. வ. வின் தமிழ் இலக்கிய வர லாற்றுக்கு அணிந்துரை தந்தது பெருமைக்குப் பெருமை செய்ததாகும்). இனி, இவ்விடத்தில் தமிழ்ச் சான்றோர் திரு. வி. க. தமது வாழ்க்கைக் குறிப்பு’களில் ரா. பி. சே. மு. வ. இருவர் பற்றியும் குறித்திருக்கும் பகுதிகள் ஆழ்ந்து கருதத்தக்கன. இருபெரும் பேராசிரியர்களிடம் இலக்கிய ஒற்றுமை வேற்றுமைகளைத் திரு. வி. க. வின் பார்வையும் பதிவும் தெளிவுப்படுத்தும். சேதுப்பிள்ளை கம்பர் தமிழை வளர்ப்பதற்கென்று தமிழ் நாட்டில் அவ்வப்போது சிலர் பிறப்பதுண்டு. அவருள் சேதுப் பிள்ளை ஒருவர். இவ்வுலகம் கம்பர் கழகமானால் உள்ள நிறைவு கொள்வோருள் சேதுப்பிள்ளை முதல் வராக இருப்பார். எவ்விடத்திலும் எம்மேடையிலும் எப்பேச்சிலும் அவர் கம்பரை மறப்பதில்லை. அவர் நா கம்பரின் உறையுளாகியது. சேதுப்பிள்ளையின் பேச்சிலும் எழுத்திலும் எதுகை மோனைகள் அணி செய்யும். அவ்வணி அவர்க்கு இயற்கையாயிற்று. என் தலைமையில் சேதுப்பிள்ளை பலமுறை சொற்பொழிவாற்றியுள்ளார். அப்பொழிவு பொழிலாகும்; பொழில் மென்காற்றை வீசும். சேதுப் பிள்ளை இளமையில் என்னுடன் நெருங்கியதில்லை. காரணம் அந்நாளில் யான் புகுந்த அரசியல் உலகம் அவர்க்குப் பிடியாமை என்று சொல்லப்பட்டது. மேற்கண்ட திரு. வி. க. வாழ்க்கைக் குறிப்புகள் பகுதியிலும்