பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 என்னிடம் வருவர். அவரும் குறிக்கத்தக்கவர் வேங்கடசாமி, இரகுநாயகன், குருசாமி முதலியோர் (மற்றவர்கள் பெயர் தெரியவில்லை). இவர்கள் தொண்டால் வருங்காலத் தமிழ்நாடு நன்கு அமையும் என்னும் நம்பிக்கை எனக்கு உண்டாயிருக்கிறது. இந்தக் கட்டுரையில் இந்த இடத்தில் திரு. வி. க. போற்றும் திரு. வி. க. வாக இன்று நம்மிடையில் உள்ள சிலம்புச்செல்வர் ம.பொ. சி. அவர்கள் தமது தன் வரலாறாகிய எனது போராட்டம் என்ற நூலின் முதற் பதிப்பில் (1974) பக்கங்கள் 545-546இல் உள்ள ஒரு குறிப்பை-இக் கட்டுரையாளனைப் புல்லரிக்கச் செய்யும் ஒரு குறிப்பை-நினைவூட்டிக் கொள்ளல் பொருத்தம். சிலப்பதிகார மாநாடு 1951 மார்ச் 24ஆம் நாளில் இராயப்பேட்டை காங்கிரஸ் திடலிலே, திராவிட இயக்க எதிர்ப்பு மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாகச் சிலப்பதிகார மாநாடு நடந்தது. மாநாட்டுப் பந்தலுக்குக் கண்ணகிப் பந்தல் என்று பெயர் வைக்கப்பட்டது. தமிழ் மொழியின் வரலாற்றி லேயே சிலப்பதிகாரத்தின் பெயரால் கூட்டப்பட்ட முதல் மாநாடு இதுதான். காங்கிரஸ் பாரம்பர்யத்தைச் சார்ந்த தமிழரசுக் கழகத்தார் நடத்திய முதல் இலக்கிய மாநாடும் இதுதான். பண்டிதர்களின் பெட்டிகளிலே மறைந்து கிடந்த சிலப்பதிகாரக் காப்பியத்தை இந்த நாளிலேதான் சாதாரணப் பொதுமக்கள் மத்தியிலே கொண்டு வந்த பெருமையை நான் அடைந்தேன். காங்கிரஸ்காரரும் என் அரிய நண்பருமான வடபாதி மங்கலம் திரு. வி. எஸ். தியாகராஜ முதலியார் வரவேற்புக் குழுத் தலைவராக இருந்து இம் மாநாட்டைத் தமிழுக்குப் புகழ் தேடித்தரும் வகையில் சிறப்பாக நடத்தி வைத்தார். தேசிய இயக்கங்களும் இலக்கியப் பண்பாட்டு இலக்கியங் களும் இந்நாள் வரை பெரிதும் தொழில் முதலாளிகள், பண்ணை முதலாளிகள் துணையோடேயே நடத்தப்படல் கருதத்தக்கது. இது பற்றி ம.பொ. சி. அவர்களே எனது போராட்டம் என்ற நூலில் பக்கம் 554இல் தமது உள்