பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்களின் தமிழுணர்வும், தமிழ்ப்பணியும் தமிழகம் அறிந்ததே. சென்னைப் பல்கலைக் கழகத்தில் தமிழ்ப் பணியாற்றி ஓய்வு பெற்றதும் அவர்தம் ஆர்வலர் களும், நண்பர்களும், மாணவர்களும் அவருடைய மணிவிழா நினைவாகச் சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஓர் அறக் கட்டளையை நிறுவினர். பின்னர், அவருக்கு மணிவிழா எடுத்து மலர் வெளியிடத் திட்டமிடும்பொழுது எதிர்பாரா வகையில் இயற்கை எய்திவிட்டார். அந்நிலையில் அறக்கட்டளைக்கெனச் சேர்க்கப் பட்ட தொகையில் எஞ்சியதைச் சென்னைப் பல்கலைக் கழகத்திற்கு வழங்கிப் பல்கலைக்கழக ஆய்விதழ்களில் பேராசிரியர் எழுதிய ஆய்வுக் கட்டுரைகளைத் தொகுத்து வெளியிடுமாறு பல்கலைக் கழகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது. அவ்வகையில் வெளி வருவதே இந்நூல். . . . * பேராசிரியரின் ஆய்வுக் கட்டுரைகள் தமிழ், ஆங்கிலம் என இருவகைப் பாகுபாட்டில் அமைகின்றது. இக்கட்டுரைகள் பேராசிரியரின் ஆய்வியற் புலங்களையும் போக்குகளையும் உணர்வையும் உள்ளத்தையும் தெளிவுறக் காட்டும் பான்மையன. பல்கலைக்கழக வழி இதனை வெளியிடுவதற்கு இசைந்த பல்கலைக் கழகத்திற்கும், சிறப்பாக, துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் ஆ. ஞானம் அவர்கட்கும் என்றும் நன்றியுடையோம். இந்நூல் வெளிவரத் துணைநின்ற பதிப்புத்துறை இயக்குநர் டாக்டர் வ. ஜெயதேவன் அவர்கட்கும், கட்டுரைகளைத் தந்துதவிய பேராசிரியரின் மருகர் டாக்டர் ம. பெ. பாலகப்பிர மணியன் அவர்கட்கும், கட்டுரைகளைத் தேர்வு செய்ய உதவிய டாக்டர் வீ. அரசு அவர்கட்கும் நெஞ்சார்ந்த நன்றி. அழகுற அச்சிட்டுதவிய அவ்வை அச்சுக்கூடத்திற்கும் நன்றி. து. இன்னாசி சென்னை.5. அமைப்பாளர் 8-3-96 (பேராசிரியர் ந. சஞ்சீவி மணிவிழா அறக்கட்டளைக் குழு)