பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

63 ளார்ந்த சமன்மைக் கொள்கை வெளிப்படும் வகையில் வரைந்துள்ள அரிய பெரிய குறிப்பு வருமாறு : தேர்தல் நெருங்கி வந்ததன் காரணமாகக் காங்கிரசில் இருந்த நிலப் பிரபுக்களும், தொழில் அதிபர்களும் சுய நலம் காரணமாகத் திராவிட எதிர்ப்பு இயக்கத்தை ஊக்குவிப்பதில் அக்கறை காட்டலாயினர், ஆனால் தமிழரசு இயக்கக் கொள்கையில் பற்றில்லாதவர் களைக் கொண்டு எதிர்ப்பியக்கம் தொடர்வதை நான் விரும்பவில்லை. (வடபாதி மங்கலம் பின்னால் (ள்) பேரறிஞர் அண்ணா முதல்வரானபோது நடத்திய உலகத்தமிழ் மாநாட்டின் பொருளாளராகவும் திகழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது). சென்னைப்பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைத் தலைவராக இருந்த டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை மாநாட்டைத் தொடங்கி வைத்துப் பேசினார். அவரது தொடக்க உரை சிலப்பதிகாரத்தை ஒட்டியதாக மட்டு மல்லாமல், நான் நடத்திவரும் புதிய தமிழகம் படைக் கும் இயக்கத்திற்கே ஆக்கமும் ஊக்கமும் தருவதாக அமைந்தது. அப்போது காஞ்சிபுரம் பச்சையப்பன் கல்லூரித் தமிழ் விரிவுரையாளராக இருந்த திரு ந. சஞ்சீவியவர்கள் சிலப்பதிகார மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சியாக வில், புலி, மீன் சின்னங்கள் பொறித்த தமிழரசுக் கொடியை உயர்த்தி வைத்துப் பேசினார். ஒர் இளம் புலவரைக் கொண்டு தமிழ் இலக்கிய இயக்கத்தைத் தொடங்கி வைக்க வேண்டுமென்ற கருத்துடனேயே நான் என். பால் பேரன்பு கொண்ட ந. சஞ்சீவியவர்களைக் கொண்டு தமிழரசுக் கொடியை உயர்த்தி வைக்கச் செய்தேன். அந்தக்கொடி இன்றளவும் இலக்கிய வானில் பறந்து கொண்டிருப்பதனை என் அகக் கண்களால் காண்கிறேன். சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராக இருந்த டாக்டர் மு. வரதராசனார். இம் மாநாட்டிற்குத் தலைமை வகித்தார். . ரா. பி. சே, மு. வ. இருவரையும் நினைவுகூறும் இக் கட்டுரைக்கு மேற்குறித்த மேற்கோள் எவ்வளவுபொருத்தம்