பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 40ஆம் ஆண்டு பிறந்த நாள் என்பது (அரசியலில் எல்லோரும் புகழ்பெற்ற பின்பே தம் பிறந்த நாளை நினைப்பது). மற்றொன்று உள்ளுர்க்காரன் - ஏன்? - மலைக்கோட்டை மண்டபத்தையே பின் சுவராகக்கொண்ட மனையில் பிறந்தவனாகிய யானே மேற்படி கூட்டம் பற்றி விளம்பரம் செய்யப் பேருதவி புரிந்தேன் என்பது. (ஆனால் திரு ம. பொ. சிக்கு அப்போதுதான் நான் அறிமுகமாகி யிருந்தேன்). இந்நிகழ்ச்சிக்கு இரண்டு மூன்று நாட்கட்கு முன்புதான் பொன்மலையில் மாபெரும் இரயில்வே தொழிலாளர் மாநாடு நடந்தது. அம்மாநாட்டை ஒட்டி நடைபெற்ற கண்காட்சியைத் திறந்து வைக்கவே ம.பொ.சி. வந்திருந்தார். அம்மாநாடு பற்றி அந்நாளில் கல்கி'யில் கல்கி எழுதிய கட்டுரையில் மாநாட்டைத் திறந்து வைத்த ம. பொ. சி. நானே ஒரு கண்காட்சிப் பொருள்' என்று குறிப்பிட்டதையும் மேற்படி மாநாட்டில் காதுகேளாத கவிஞர்கள் நாமக்கல் கவிஞரும் வள்ளத்தோலும் கலந்து கொண்டது பற்றியும் குறிப்பிட்டிருந்தார். என் வீட்டில் சிறிது காலம் குடியிருந்த திரு சி. வெங்கடசாமி அவர்களோடு நான் இந்த மாநாட்டிற்குச் சென்றபோதே ம. பொ. சி. யையும் கவிஞர்களையும் கண்டேன். எனது போராட்டத்தில் இன்னுமோர் குறிப்பு-பக்கம் 360: - - மலைக் கோட்டைப் பேச்சுக்குப் பின்னர் 5 மாதம் கழித்து அஃதாவது, 11-11-45 இல் சென்னை மண்ணடிப் பகுதியில் லிங்கி செட்டித் தெருவிலுள்ள ஒரு கட்டடத்தில் புதிய தமிழகம்' என்ற தலைப்பிலே தொடர் சொற்பொழிவைத் தொடங்கினேன்... வாரத்திற்கு வாரம் எனது பேச்சைக் கேட்கும் மக்கள் அதிகரித்து வந்தனர். குறிப்பாகத் தமிழாசிரியர்களும் மாணவர்களுந்தான் மிகுதியாக வந்தனர் என்று கூற வேண்டும். ஆசிரியர்களிலே வித்துவான் மு. வரத ராசனார் (பிற்காலத்தில் டாக்டர் பட்டம் பெற்றார்), பேராசிரியர் அ. மு. பரமசிவானந்தம், வித்துவான் அன்பு கணபதி ஆகியோர் தொடர்ந்து வாரந்தோறும் வந்திருந்து எனது சொற்பொழிவுகளைக் கேட்டு மகிழ்ந்தனர். -