பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 மேற்கண்ட மேற்கோள் டாக்டர் மு. வ. எழுத்துக்களின் பின்புலத்தை ஆய்வோருக்குப் பெருந்துணை புரியும். “எனது போராட்டம் (பக். 500) நூலிலிருந்து இன்னும் சில மேற்கோள்கள்: 3. டாக்டர் மு. வரதராசனார் அவர்களால் தமிழ் முரசு இதழில் அன்னைக்கு - தம்பிக்கு என்னும் தலைப்பு களில் கழகக் கொள்கைகளை விளக்கும் வகையில் தொடர்ந்து எழுதப்பட்ட கட்டுரைகளைத் தொகுத்தும் நூல்கள் வெளியிடப்பட்டன. தமிழ்ப் பெரியார் திரு வி. க., டாக்டர் ரா. பி. சேதுப் பிள்ளை, டாக்டர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் ஆகிய சான்றோர்கள் எனக்கு ஆக்கமும் ஊக்கமும் தந்து வந்தனர். இன்னுமொரு மேற்கோள் : 1953 ஜனவரி 24, 25 தேதிகளில் த. அ. க. இரண்டாவது மாநில மாநாடு கூடியது. முதல் நாளில் டாக்டர் ரா. பி. சேதுப்பிள்ளை தல்ைமையில் இலக்கிய மாநாடு நடை பெற்றது. டாக்டர் தெ. பொ. மீனாட்சிசுந்தரனார் வர வேற்புக் குழுத்தலைவராக இருந்தார். செட்டி நாட்டரசர் எம். ஏ. முத்தையா செட்டியார் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். இந்த இலக்கிய மாநாட்டிலும் சென்னைப் பிரச்சனை பற்றி அதிகமாகப் பேசப்பட்டது. டாக்டர் ரா.பி. சேதுப் பிள்ளை தமிழரசுக் கழகத்தைத்தான் தமிழ்நாடு நம்பி யிருக்கிறது. சென்னையைக் காக்க ம. பொ. சி. காலா லிடும் கட்டளையைத் தலையால் நிறைவேற்ற நான் தயார் என்று முழங்கினார். அவரது குரல் இன்னமும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது (பக். 614). இக்கட்டுரையில் டாக்டர் ரா. பி. சே., டாக்டர் மு. வ. ஆகிய இரு பெரும் பேராசிரியர்கட்கு உடன்பாட்டு நிலையில் தேசிய, இலக்கிய நிலையில் எதிர்மறையான திராவிடப் பின்னணியோடு முழுதும் உடன்பாடான தமிழரசுக் கழகப் பின்னணியும் மிகுதியாக இருந்ததைக் காட்டவே மேற்கண்ட மேற்கோள்கள். இம்மூன்று