பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

67 பின்னணிகளையும் ஊடுருவிய பொதுவுடைமைப் பின்னணி பெருமளவில் மு. வ. விடமும் ஒரு சிறிது டாக்டர் ரா. பி. சே. யிடமும் காணலாம் (சான்று: ஓராண்டு தீபாவளி மலரில் வெளிவந்த சிவனடியார் ஸ்ட்ரைக் என்னும் கட்டுரை). இந்த வேறுபாட்டுக்கும் ஒரு காரணம் பேரா சிரியர் ரா. பி. சே. யின் மூப்பும் டாக்டர் மு. வ. வின் இளமையும் - இனி, பேராசிரியர்கள் டாக்டர் ரா. பி. சே., டாக்டர் மு. வ. ஆகியோரின் தமிழ்த்தொண்டின் தனிச்சிறப்புகள் பற்றிச் சில கருத்துக்கள்: 1. பேராசிரியர் டாக்டர் ரா. பி. சே. பாளையங் கோட்டை செயின்ட் சேவியர் கல்லூரியில் பயின்றமை யால் ஒரளவு கிறிஸ்துவப் பின்னணி உடையவர்; டாக்டர் மு. வ. திருப்பத்துார் குருகுல ஆசிரமத் தொடர்பால் ஒரளவு கிறிஸ்துவப் பின்னணி உடையவர். ஆனால் இவ்விருவருள் டாக்டர் ரா. பி. சே. அவர்கள். கால்டுவெல் ஐயர் சரிதம்’ (1932), கிறித்தவத் தமிழ்த் தொண்டர் (1946) போன்ற முன்னோடி நூல்களை எழுதியமை நினைக்கத்தக்கது. இதற்கும் அவர்தம் காலப் பின்னணி காரணமாகலாம். அடுத்த நிலையில் பேராசிரியர் புரிந்த பெருந்தமிழ்ப்பணி தமிழ் நூற் சுவையை இனிய செந்தமிழ் நடையால் மேடை யிலும் எழுத்திலும் மேம்படுத்தியதன் வாயிலாகத் தமிழ் உணர்ச்சி, அறிவு வெள்ளம் தமிழ் மக்களாகிய கழனி முழுதும் பாய்ந்தது. ஆங்கில மொழியே அருமை பெருமை உடையது என்று கற்றறிந்த தமிழர்களும் கருதிய காலத் தில் மேடைதோறும் ஆங்கிலேயர் உடை அணிந்து அருந்தமிழின் பெருமையை அழகோடும் ஆற்றலோடும் எடுப்போடும் எழிலோடும் அழுத்தம் திருத்தமான ஒலிப் பாலே உயர்த்தியதால் ஆங்கிலத்திற்கு அடிமைப்பட்டிருந் தாரும் நாணித் திருந்தினர்; திருந்தாதாரும் தம் உள்ளத் துக்குள் தமிழை மதிக்கத் தொடங்கினர். பேராசிரியர் டாக்டர் ரா. பி. சே.க்கு முன் 1927 முதல் சென்னைப் பல்கலைக்கழகத்தில் சிறந்த முறையில் திருவாளர்கள் கே. என். சிவராசப் பிள்ளை, எஸ். அனவரத விநாயகம் பிள்ளை, எஸ். வையாபுரிப் பிள்ளை போன்றவர்களால் தமிழாய்வு நிகழ்த்தப்பட்டாலும் - குறைகளிருப்பினும் முன் னோடியாக மிக விரிவான அடிப்படையில் தமிழ்ப்