பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 பேரகராதி வெளியிடப்பட்டிருந்தாலும் அவர்தம் பணிக ளெல்லாம் நூற்றுக்கணக்கான அறிஞர்கட்கே பயன் பட்டது அப்பயன்பாட்டை அகலப்படுத்தி - ஆழப் படுத்திப் பல்லாயிரக் கணக்கான மக்கள் செஞ்சொற் கவியின் பத்தைச் செவிநுகர்கனிகளாகப் பெறச் செய்த முதல் தமிழ்ப் பேராசிரியர் டாக்டர் ரா. பி. சே. அவர்களே. புலமை மிக்கவர்களாலும் சாதிக்க முடியாத் ஒரு பணியை - தமிழகமெங்கும் தமிழின்பத்தைப் பல்லாயிரவர் நுகரச் செய்யும் பணியைச் செய்து, அதன் காரணமாகவே சொல் லின் செல்வர்' என்ற சிறப்புப் பட்டமும் பெற்றவர் டாக்டர் ரா. பி. சே. இறுதியாக, பேராசிரியர் நாற்பதாண்டுகட்கு முன்பே மொழியியல் ஆய்வின் தேவைகளை உணர்ந்து ‘Tamil Literary and Colloquial’ stairsp propapu job “Words and their significance’ argàsp Granabu job Buh Léi).565603;&pé, வாயிலாகவே வெளிப்படுத்தினார். இந்நூல்களை யான் தமிழ்த்துறைத் தலைவனானதும் மறுபதிப்புச் செய்யும் தொண்டினைப் புரிந்தேன். ஒலி, பொருள் ஆகிய இரு பெருந்துறைகள் பற்றிய இந்த ஆய்வின் பெருமையை டாக்டர் கமில் சுவலெபில் அவர்களும் போற்றியுள்ளார். அன்றாட வாழ்விலேயே இயற்கையோடு இயற்கையாய் வாழ்ந்த நாட்டுப்புற மு. வ. சங்க நூல்களில் தலைமை யிடம் பெற்றுள்ள இலக்கியப் பொருளாகிய இயற்கையைத் தம் பிஎச். டி. ஆய்வுக்கு எடுத்துக்கொண்டது வியப்பிற். குரியது இல்லை; விழுப்பம் வாய்ந்ததே. டாக்டர் மு. வ. தமிழாய்வுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் முதல் பிஎச். டி. பட்டம் பெற்றவர். அவ்வாறே தம் பெருந்தமிழ் தொண்டுக்காக மறைவதற்கு முன் அமெரிக்க விஸ்கான்சன் பல்கலைக்கழகத்தில் D. Litt. பட்டமும் பெற்ற தனிப் பெருமையும் மு. வ. வுக்கு உண்டு. முதலில் தமிழ்ப் புலவர் பட்டம் பெற்றுப் பின்னர் பிஎச். டி. பட்டம் பெற்று, மதுரைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆண் முதற் பெருமையும் டாக்டர் மு. வ. வுக்கே உண்டு. - ரா. பி. சே. அவர்களுடைய கட்டுரைகளில் என்னைக் கவர்ந்த புதுவகையான கட்டுரைகள் கடற்கரையிலே’ என்னும் தலைப்புக்கொண்ட நூலில் உள்ளவையே. பேரா சிரியர் ரா. பி. சே. அவர்களுடைய இறுதி நூலாகிய ஆற்றங்கரையிலே அவர் சொல்லச் சொல்ல யான் எழுதி