பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 'கல்கி வார இதழுக்கு அனுப்பியதாகும். ஆற்றங்கரை யினிலே கட்டுரைகளைச் சொல்லின் செல்வர் சொல்லச் சொல்ல யான் எழுதியபோது அவர் எவ்வாறு இலக்கியவரலாற்றுச் சிந்தனைக் கடலில் மூழ்கி மூழ்கிக் கருத்து முத்து களை வாரிக்கொண்டு வருகிறார் என்பதை நேரில் கண்டு இன்புறும் பேறு பெற்றேன். சென்னைப் பல்கலைக் கழகத்தின் மணிக்கூண்டு கட்டடத்தின் வடபால் பகுதியின் முதல் அறையில் உட்கார்ந்து கொண்டு கடற்கரையை நோக்கிய கண்களோடு தம் வாயிலிருந்து வரும் சொல்லை யும் பொருளையும் 'தாப்பு, தாமரைப்பூ என்று தாயும் தமக்கையரும் சொல்லி மகிழும் வகையில் குழந்தை கை விரல்களை மெல்லச் சுழற்றிச் சுழற்றிக் காட்டுவது போல காட்டிக் காட்டித் திருவாய் மலர்ந்த திறத்தைப் பன்னாளும் சுவைக்க நேர்ந்தமை-அதுவும் அவர் தம் கடைசி ஆண்டில் -யான் பெற்ற பெரும் பேறாகும். ஆம். கட்டுரையும் ஒரு கலையே-கவிதை போன்றதே என்பதைத் தம் யாழும் குழலும் இடியும் மின்னலும் போன்ற பேச்சுக் கட்டுரையாலும் எழுத்துக் கட்டுரையாலும் காண் பித்தவர் ரா. பி. சே, ரா. பி. சே. யின் ஆய்வுத்திறம் புதிய தமிழகத்தின் ஊர்ப்பேர்களெல்லாம் சீர்பெற உதவியது. தி. மு. க. அரசு தோன்றி ஊர்ப் பெயர்கள் சீர்பெற உந்தியது; உதவியது-வாய்ப்பு நேர்ந்த போதெல்லாம் திரு. ரா. பி. சே. ஊர்ப் பெயர்கள் பற்றிப் பேசிய ஆய்வுகளேயாம். எடுத்துக் காட்டாக, தியாகத்தை நினைவூட்ட வேண்டிய தியாகராய நகரை தியாகை என்று தமிழ் மரபுப்படி சுருக்காமல் தி. நகர், தி. நகர் என்று தீ நினைவு வர அழைக்கலாமோ என்பார். இன்னும் இந்தத் தீம்பு நீங்கவில்லை. என்றாலும் 'பார்க்கு பார்க்கு (Park) என்று நம் இரயில் நிலையம் ஒன்றை அழைக்கிறார்களே! எதைப் பார்க்கு? ஏன் பூங்கா என்று பூரிப்புடன் சொல்லலாமே என்று மேடைதோறும் அவர் முழங்கிய முழக்கம் வீண்போக வில்லை! ம்ாயவரம்' கேட்கிறார்களே! மயிலாடுதுறை என்று வாய் மணக்க அழைக்கலாகாதா? என்ற பேராசிரியர் வினாவுக்கு விடை கிடைக்காமல் போகவில்லை! இதை எல்லாம் எண்ணும் போது இன்று நம்முடன் வாழும் தொண்ணுாறு வயது தொண்டுக் கிழவர் (இரு பொருளிலும்) சுத்தானந்த