பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

70 பாரதியார்-தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் முதல் இராசராச சோழன் பரிசாகிய ஒரு நூறாயிரம் பெற்றவர், செந்தமிழுக் குச் சேதுப் பிள்ளை' என்று போற்றியது பெரும் பொருத்தமே என்பது புலனாகும். பேராசிரியர் டாக்டர் மு. வ. அவர்கள் செய்த தனிப் பெருந்தொண்டு படைப்பிலக்கியங்களைப் படைத்தமையே. அதிலும் சிறப்பாகக் குறிக்கத் தக்கது தமிழ்ச் சமூக வாழ்வையே தலைமையாகக் கருதி அவர் படைத்த புதினங் களே. தமிழ் முரசில் வந்த அந்தநாள் தவிர, ஏனையன எந்த வார, மாத இதழ் (விளம்பரத் துணையுமின்றி அவர் படைத்த புதினங்கள். 1945, 1960 ஆகிய பதினைந்து ஆண்டு களில் தமிழ்நாட்டு இளைஞர் உலகில் தனிம்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. புதினங்களால் மு. வ. பெற்ற புகழை நோக்க அவர் தம் இலக்கியக்கட்டுரைகள், இலக்கிய ஆய்வுகள், மொழி நூல், மொழியியல் கட்டுரைகளால் எல்லாம் பெற்ற செல்வாக்குச் சிறிதே. மழலையர் முதல் முதியவர் வரைக்கும் பல நூல்கள் எழுதியிருப்பினும் மு. வ. வின் புகழுக்கும் செல்வாக்குக்கும் காரணம் அவர் தம் கதைகளிலும், கடிதங்களிலும் காணப்பட்ட சிந்தனைச் சிறப்பே ஆகும். நடை வகையில் எடுத்துக்கொண்டாலும் திரு. வி. க., சேதுப்பிள்ளை போன்றோரின் செந்தமிழ் நடை இல்லை மு. வ. வின் நடை. ரா. பி. சே. யின் நடை அணி நடை என்றால் மு. வ. வின் நடையை அறிவுநடை - அற நடை எனலாம். முன்னவர் நடையை வண்ண நடை என்றால், பின்னவர் நடையை அன்ன நடை எனலாம். வேறு-வீறு வகையில் சொன்னால், மு. வ. வின் எளிய இனிய நடை எஃகின் மென்மையையும் வன்மையையும் ஒருங்கே படைத்ததாகும். இதற்குக் காரணம் அவர் பெரிதும் மதித்துப் போற்றிய காந்தியத்தின் எளிமையே வலிமை’ என்ற எண்ணம்தான் எனலாம். ரா. பி. சே. யின் நூல்களைவிட நான்கு மடங்கு அதிக நூல்களை டாக்டர் மு. வ. படைத்ததற்கான பெருங்காரணம் மேடைப் பேச்சுகளில் எவ்வளவு குறைத்துக்கொள்ள முடியுமோ அவ்வளவு குறைத்துக்கொண்டு எழுத்துப் பணி யில் ஈடுபட்டமையே ஆகும். கலை உணர்வோடு சேதுப் பிள்ளையினும் அழகாகவும் பேசவல்ல டாக்டர் மு. வ. தம் பேச்சுத் திறமையைத் திட்டமிட்டு அடக்கி ஒடுக்கிக்