பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. மலையாளிகள் தமிழ் தமிழ் நாட்டுப் பழங்குடி மக்களுள் தனிச் சிறப்பு வாய்ந்தவர்கள் மலையாளிகள். இவர்களைப் பற்றிய விரிவான ஆராய்ச்சி உரைகளைத் தென்னார்க்காடு, வட வார்க்காடு, சேலம், திருச்சி மாவட்டக் கெசட்டீர்களும் தர்ஸ்டன் அவர்களின் 'சாதிகளும் குழுக்களும் பற்றிய புகழ்பெற்ற நூலில் 'மலையாளிகள் பற்றிய பகுதியும், டிாக்டர் இர்ன்பில்ஸ் அவர்களின் கொல்லி மலையாளிகள்' பற்றிய ஆய்வுரையும் வழங்குகின்றன. ஈண்டு மலை யாளிகள் பற்றிக் கலைக் களஞ்சியம் இரத்தினச் சுருக்க மாய்த் தரும் செய்திச் சுருக்கத்தை மட்டும் காண்போம். அது வருமாறு: மலையாளிகள் : சேலம் மாவட்டத்திலுள்ள சேர்வ ராயன், கொல்லி மலைகளிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டத் திலுள்ள பச்சைமலைத் தொடரிலும், தென்னார்க்காட்டி லுள்ள கல்வராயன் மலைகளிலும், வடவார்க்காட்டிலுள்ள சவ்வாது மலைகளிலும் வசிக்கும் ஆதிக் குடிகள். இவர்கள் தொகை சுமார் 60,000 ஆகும். இவர்களில் பெரிய மலை யாளிகள், கொல்லி மலையாளிகள், பச்சை மலையாளிகள் என்ற மூன்று பிரிவுகள் உண்டு. உடையிலும், சில பழக்க வழக்கங்களிலும் கேரள மக்களை ஒத்திருந்தாலும், இவர்கள் காஞ்சீபுரத்திலிருந்து வந்து குடியேறியதாகக் கூறுகிறார்கள்; தமிழ் பேசுகிறார்கள். பச்சை மலையாளிகள் பச்சை குத்திக்கொள்ளுகின்றனர். சாய ஆடைகளை அணி கின்றனர். விவசாயம் மலையாளிகளின் தொழில். தோட்டங்களிலும், காடுகளிலும் வேலை செய்கின்றனர். 1. கலைக்களஞ்சியம்-தொகுதி 8 : பக்கம் 189.