பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கண்ணகி

கண்ணகி Kannaki (a lady)

(1) கற்பு - chastity

கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம்

அல்லது பொற்புடைத் தெய்வம்

யாம் கண்டிலமால்' (சிலப். 15: 143-

144)

(2) புகழ் - fame

'கோட்டம் வழிபாடு

கொண்டிருப்பாள், வாட்டருஞ்சீர்க்

கண்ணகி நல்லாளுக்குற்ற

குறையுண்டென்று' (சிலப்.9: 40-41)

(3) பெருமை / புகழ் - greatness

'பீடுகெழு நங்கை பெரும்பெயர்

ஏத்தி' (சிலப்.23: 195)

கண்ணன் Kannan

(1) கருமை நிறம் - dark colour

'கண்ணன் என்னும் கருந்தெய்வம்'

(நாலா.627: 1)

கண்ணாடி (mirror) பார். 'கணாடி'

கண்ணீர் Kannir (tear)

(1) துன்பம், ஆற்றாமை - suffering -

'தம்மோன் கொடுமை நம் வயின்

எற்றி, நயம் பெரிது உடைமையின்

தாங்கல் செல்லாது, கண்ணீர்

அருவியாக அழுமே, தோழி!'

(நற்.88: 6-9)

(2) அன்பு | நெகிழ்ச்சி - love

'அன்பிற்கும் உண்டோ

அடைக்குந்தாழ் ஆர்வலர்

புன்கண்நீர் பூசல் தரும்' (குறள்.71)

(3) வெம்மை | துன்பம் - heat /

suffering

'இமை தீய்ப்பன்ன கண்ணீர்

தாங்கி' (குறு.4: 2)

(4) உவகை/ மகிழ்ச்சி - pleasure / joy

'வால் நரைக் கூந்தல் முதியோள்

சிறுவன் களிறு எறிந்து பட்டனன்

என்னும் உவகை ஈன்ற

ஞான்றினும் பெரிதே; கண்ணீர்

நோன் கழை துயல்வரும்

வெதிரத்து வான் பெயத் தூங்கிய

சிதரினும் பலவே' (புறம்.277: 2-6)

(5) இறப்புத் துயரம் - Sorrow on

demise

'அஞ்சுவந் தன்று, இம் மஞ்சுபடு

முதுகாடு; நெஞ்சுஅமர் காதலர்

கணவிரம்



அழுத கண்ணீர் என்புபடு

சுடலை வெண்நீறு அவிப்ப'

(புறம்.356: 4-6)

(ஆ) கண்பனி Kanpani

(6) பிரிவுத்துன்பம் - sorrow on

seperation

'இதழ் அழிந்து ஊறும் கண்பனி,

மதர் எழில் பூண்ஆக வனமுலை

நனைத்தலும் காணார் கொல்லோ -

மாணிழை! - நமரே?' -

(குறு.348: 4-6)

(7) இன்பம் / மகிழ்ச்சி - pleasure

'கண் பனி - நிறுத்தல் எளிதோ -

நுகர் குயில் அகவும் குரல்

கேட்போர்க்கே ?' (அகம்.97: 16-23)

(ஒப்பு) Tear ஆனந்தப் பெருக்கு,

இரக்கம், மெல்லியல்பு, வளமை;

இறப்பு, துன்பம், அச்சம், மன

அழுத்தம், மன உலைவு,

வலிமையின்மை.

கணந்துள் Kanantul (a bird)

(1) தனிமை - loneliness

'பார்வை வேட்டுவன் படு வலை

வெரீஇ, நெடுங் கால்

கணந்துள்அம் புலம்பு கொள்

தெள் விளி சுரம் செல் கோடியர்

கதுமென இசைக்கும்' (நற்.212: 1-3)

(2) முன்னறிவித்தல் - foretell

'நெடுங்காற் கணந்துள் ஆள்

அறிவுறீஇ ஆறுசெல் வம்பலர்

படைதலை பெயர்க்கும்'

(குறு.350: 5-6)

கணவிரம் Kanaviram (a flower)

(1) சிவப்பு நிறம் - red colour

'கல்லுடைக் குறும்பின் வயவர்

வில் இட, நிண வரிக் குறைந்த

நிறத்த அதர்தொறும், கணவிர

மாலை இடூஉக் கழிந்தன்ன புண்

உமிழ் குருதி பரிப்பக் கிடந்தோர்'

(அகம்.31: 7-10)

(ஆ) கணவிரி Kanaviri

(2) வளமை - prosperity