பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணாடி

'சினைவளர் வேங்கை, கணவிரி

காந்தள், ... .......... வேய் பயில்

சோலை அருவி தூர்த்தர'

(பரி.11: 20-23)

சிவப்பு நிறம்

'கணவிரி மாலை

கைக்கொண்டென்ன - நிணநீடு

பெருங்குடர் கையகத்து ஏந்தி'

(மணி.5: 47-48)

(இ) கணவீரம் Kanaviram

(3) தண்மை, கடவுட்டன்மை, வழிபாடு

- cool, divinity, worship -

'சிறுபசு மஞ்சளொடு நறுவிரை

தெளித்து, பெருந்தண் கணவீர

நறுந்தண் மாலை துணை அற

அறுத்துத் தூங்க நாற்றி,

நளிமலைச் சிலம்பில் நல்நகர்

வாழ்த்தி ' (திருமுரு.235-238)

கணாடி Kanati (mirror)

(1) மங்கலம் - auspicious

'செங்கயல் இரட்டை திருவார் சுடர்

கணாடி பொங்குகொடி வார்முரசம்

தோட்டிபுணர் கும்பம் மங்கலங்கள்

எட்டுமிவை மணியிற்

புனைந்தேத்தி' (சீவக.2487: 1-3)

(ஆ) மண்டிலம் Mantilam

(2) தெளிவு

'கையகத்த் எடுத்துக் காண்போர்

முகத்தை மையறு மண்டிலம்

போலக் காட்ட' (மணி.25: 136-137)


கணிகை Kanikai (danseuse / courtesan)

(1) பொய்ம்மை - false

'ஆயத்து ஒருத்தி, அவளை, அவர்

காமம் மாயப் பொய் கூட்டி

மயக்கும் விலைக் கணிகை'

(பரி.20: 48-49)

கணிகைச் சிறுவன் Kanikaic ciruvan

(son of danseuse / courtesan)

(1) சிறப்பின்மை - insignificant

'சீர்சால் கணிகைச் சிறுவன்போல்

சிறப்பின்று அம்ம இது என்றான்'

(சீவக. 718: 4)

கணிச்சி



கணிச்சி Kanicci (Kuntali)

(1) கூர்மை - sharp

'சீறு அரு - முன்பினோன்

கணிச்சிபோல் கோடு சீஇ, ஏறு

தொழூஉப் புகுந்தனர்'

(கலி.101:8-9)

(2) அழிவு/இறப்பு - destruction/ death

'மடங்கலும், கணிச்சியும்,

காலனும், கூற்றும், தொடர்ந்து

செல் அமையத்துத் துவன்று உயிர்

உணீஇய' (கலி.105: 20-21)

(3) காமம் - lust

'காமக் கணிச்சியால் கையறவு

வட்டித்து' (பரி.10: 33)

(4) வலிமை - strength

'பரல் மண் சுவல முரண் நிலம்

உடைத்த வல் வாய்க் கணிச்சி'

(அகம்.21: 21-22)

கணிச்சி (மழுப்படை) Kanicci

(Maluppatai) (axe)

(1) அழிவு - destruction

'நீயே, மருந்து இல் கணிச்சி

வருந்த வட்டித்து' (புறம்.42: 22)

(2) கூர்மை - sharp

'கணிச்சிக் கூர்ம்படைக் கடுந் திறல்

ஒருவன்' (புறம்.195: 4)


(ஆ) மழு Malu |

அழிவு - destruction

மன்மருங்கு அறுத்த மழுவாள்

நெடியோன்' (அகம்.220: 5)

(3) பயன்பாடு - use

'மரம் கொல் - தச்சன் கைவல்

சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து

அற்றே - எத்திசைச் செலினும்,

அத்திசைச் சோறே'

(புறம்.206: 11-13)

(4) ஆற்றல்

'படைநவில் வெண்மழுவான்

பலபூதப் படையுடையான்

(திருஞான. தேவா.2559: 1)

(இ) குடாரி Kutari

அழிவு - destruction

'எரி கனன்று ஆனாக் குடாரி

கொண்டு - அவன் உருவு

திரித்திட்டோன்' (பரி.5:34-35)


72