பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கணை

(ஒப்பு) Axe, Tomahawk ஆன்மீக

ஊடுருவல், ஒளியின் ஆற்றல்,

செயல் முறை, தண்டித்துத்

திருந்தக் கூடிய தன்மை , வளமை;

அழிவு, இறப்பு, சீற்றம்,

துன்புறுத்தல், போர்,

போர்க்கடவுளர்.

கணை (arrow) பார். 'தொடை'

கணை ஐந்துடைத் திருமகன் Kanai

aintutait tirumakan

(1) அழகு – beauty, lovely, charming

'அருமையால் அழகிற் கணை

ஐந்துடைத் திருமகன் திருமாநில

மன்னனே' (சீவக. 160: 3-4)

(ஆ) காமன் Kaman

அழகு

'மைந்தருள் காமன் அன்னான்

மகளிருள் திரு அனாளை'

(சீவக.840: 3)

கத்தி Katti (knife)

(1) கூர்மை - sharp

'ஆங்கு அயிற் கத்தியால்

அரிந்தன்புடன்' (பெரிய.4047: 3)

கதலியின் கனியினைக் கழியச் சேரும்

ஊசி Kataliyin kaniyinaik kaliyac

cerum uci

(1) எளிமை - easy

'கார் உண் வார் சுவைக் கதலியின்

கனியினைக் கழியச் சேரும்

ஊசியின் சென்றது நின்றது எனச்

செப்ப' (கம்ப.கிட்.292: 1-2)

கதவம் Katavam (door)

(1) காவல் - security

'கடவுள் அஞ்சி வானத்து இழைத்த

தூங்கு எயிற் கதவம் காவல்

கொண்ட ' (பதி.31: 18-19)

(2) திண்மை - strong

'எழுதியன்ன திண் நிலைக் கதவம்'

(அகம்.311:3)

(3) பாதுகாப்பு - safety

கமுகு



'முனைத் தெவ்வர் முரண் அவியப்

பொரக் குறுகிய நுதி மருப்பின்

நின் இனக் களிறு செலக்

கண்டவர் மதிற் கதவம் எழுச்

செல்லவும்' (புறம்.98: 1-4)


(ஆ) கதவு Katavu

(4) திண்மை - firm

'எழுவிட்டு அமைத்த திண்நிலைக்

கதவின்' (புறம்.341: 4)

(5) அடைப்பு / தடை - obstruction

'செற்றை வாயில், செறி கழிக்

கதவின்' (பெரும்.149)

(6) நிறை - chastity, merit, virtue

'காமக் கணிச்சி உடைக்கும்

நிறை என்னும் நாணுத் தாழ்

வீழ்த்த கதவு' (குறள்.1251)

கதிரவன் (sun) பார். ‘சுடர்'

கந்துள் (கரிக்கட்டி) Kantul (charcoal)

(1) கருமை - black

'செஞ்சுடர் இலங்கும் செந்தீக்

கருஞ்சுடர்க் கந்துள் சிந்தி'

(சூளா . 164: 3)

கம்புள் Kampul (a bird)

(1) தலைவன் - hero

'பழனக் கம்புள் பயிர்ப்பெடை

அகவும் கழனி ஊர' (ஐங்.60: 1-2)

(ஆ) கம்புள் பேடை Kampul petai

(2) தலைவி - heroine

'வெண் நுதற் கம்புள் அரிக்குரற்

பேடை, தண் நறும் பழனத்துக்

கிளையோடு ஆலும்' (ஐங்.85: 1-2)

கமலை (a lady)

(1) கற்பு - chastity

'கம்பம் இலாதாள் கமலைக்கு

விமலை என்பாள்' (சீவக. 1975:3)


கமுகு (areca tree)

(1) கடைநிலை நட்பு, தாழ்வு - low,

low friend

'கடையாயார் நட்பில்

கமுகுஅனையர்' (நாலடி.216:1)

(2) உயர்ச்சி - lofty