பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கயம்


‘பாளையுடைக் கமுகு - ஓங்கிப்

பன்மாட நெருங்கியெங்கும்'

(திருநா தேவா.376: 1-2)

(ஆ) கமுகு -நடுதல் Kamuku

'natutal

(3) மங்கலம்

'காய்க்குலை கமுகும் 'வாழையும்

'வஞ்சியும் பூக்கொடி வல்லியும்

கரும்பு நடுமின்' (மணி.1: 46-47)

கயம் Kayam (pond)

(1) தண்மை - cool

  • சிறு கண்யானைப் பெருங் கை ஈர்

இனம் குளவித் தண் கயம்

குழையத் தீண்டி ' (நற்.232: 1-2)

(2) அழகு - beautiful

'பிணி விடு முருக்கு இதழ் அணி

கயத்து உதிர்ந்து உக' (கலி.33: 4) -

(3) காமம் - passion

'காமரு காமம் என்னும் கருங்கயம்

படிந்து சென்று' (சூளா.1705: 5-6)

(ஆ) கயன் Kayan

(4) வளமை | செழிப்பு - prosperity

'நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்

பாடு சிலம்பு இசை, ஏற்றத் தோடு

வழங்கும் அகல் ஆம்பியின் கயன்

அகைய வயல் நிறைக்கும்'

(மது.89-92)

(இ) குளம் Kulam

(5) மாட்சி - dignity / honour.

'கல்லா யானைக் கடுந்தேர்ச்

செழியன் படை மாண் பெருங்

குள மடைநீர் விட்டென'

(நற்.340: 2-3) |

(6) வளமை - prosperity

'குளம் தொட்டு வளம் பெருக்கி'

(பட்.284)

(7) உடம்பு

'தூய்மை யில்குளந் தூம்பு

விட்டாம் பொருள் உணர்த்தி'

(சீவக.2760: 3)

(ஈ) பொய்கை Poykai

(7) தண்மை - cool

கயிறு



அம் தண் பொய்கை எந்தை எம்

ஊர்' (குறு.354: 4)

(9) இனிமை - sweet

'தீம் பெரும் பொய்கை யாமை -

இளம் பார்ப்பு ' (ஐங்.44: 1)

(10) வளமை - prosperity

'வண் துறை நயவரும் வளமலர்ப்

பொய்கை ' (ஐங்.88: 1)

(உ) வாவி மூழ்கல் Vavi milkal

(12) மூப்பு நீங்கல் | இளமை பெறல்

'வாவியின் மூழ்கி ஏறும் கணவரும்

மனைவியாரும் மேவிய மூப்பு

நீங்கி விருப்புறும் இளமை

பெற்று' (பெரிய.2.39)

(ஒப்பு) Pond, Pool அறிவு நுட்பம்,

பிரதிபலிப்பு, வானியல் அறிவு;

கட்டழிவு.

கயல் Kayal (a fish)

(1) கருமை - black

'கயல சேல கருங்கண்ணியர்

நாள்தொறும்'

(திருஞான. தேவா. 1442: 1)

கயிலை Kayilai (a mountain)

(1) சிறப்பு / பெருமை, புண்ணியம்

- great, favourable, blessed

'தன்னை ஆர்க்கும் அறிவு

அறியான் என்றும் மன்னி வாழ்

கயிலைத் திருமாமலை .. .. ..

புண்ணியம் திரண்டுள்ளது

போல்வது' (பெரிய.11:3-4)

(2) வெண்மை , ஒளி, மகிமை - white,

bright, glory

'சோதிவெண் கயிலைத் தாழ்வரை

முழையில்' (பெரிய.18: 3)

(ஆ) வரை Varai

(3) பழமை - ancient

'தொல்லை மால்வரை பயந்த

தூயாள்தன் திருப்பாகன்'

(பெரிய 345: 1-2)

கயிறு Kayiru (rope)

(1) பிணைப்பு - bond