பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலிமா

'புள்ளும் நிமிர்ந்தன்ன பொலம்

படைக் கலி மா' (நற்.78: 9) -

(ஆ) கலிமா இயக்கமின்றிக்

கிடத்தல் Kalima iyakkaminrik kitattal

(2) தீமை, இறப்பு - evil, death

'கால் இயற் கலி மாக் கதி இல

வைகவும்' (புறம்.229: 21)

(இ) புரவி Puravi

(3) செயல் திறம், மாட்சி - capacity /

honour

'ஆதி போகிய அசைவு இல் நோன்

தாள் மன்னர் மதிக்கும் மாண்

வினைப் புரவி' (நற்.81:2-3)

(4) விரைவு, நெடும் பயணம் - speed,

long journey

'கடும் பரி நெடுந்தேர்க் கால் வல்

புரவி' (ஐங்.422: 1)

(5) வெற்றி - success, victory

'வயம்படு பரிப் புரவி மார்க்கம்

வருவார்' (பரி.9: 51)

(6) வெற்றி, புகழ் - success, fame

'விறற் புகழ் மாண்ட புரவி

எல்லாம்' (புறம்.63: 3)

(7) வளமை - prosperity

'வண் பரிப் புரவிப் பண்பு

பாராட்டி' (புறம்.301: 13)

(8) வேகம் / ஆற்றல் - speed, power

‘வெவ் விசைப் புரவி வீசு வளி

ஆக' (புறம்.369: 7)

(ஈ) கடுமா Katuma

விரைவு - speed

'கடு மாப் பூண்ட நெடுந் தேர்'

(நற்.91: 11)

(உ) இவுளி Ivuli

விரைவு / வேகம் - speed

'கால் கிளர்ந்தன்ன கடுஞ் செலல்

இவுளி' (பதி.தி.2: 4)

(ஊ) குதிரை Kutirai

(9) பரத்தை - prostitute

'ஏந்தி எதிர் இதழ் நீலம்

பிணைந்தன்ன கண்ணாய்! குதிரை

வழங்கி வருவல் அறிந்தேன்,

குதிரை தான்' (கலி. 96: 5-7)

கலிமா



விரைவு / வேகம் - speed

'விடு விசைக் குதிரை விலங்கு பரி

முடுக' (அகம்.14:18)

(எ) பரிமா Parimd|

விரைவு - quickness

'யானை யுடையார் கதனுவப்பர்

மன்னர் கடும்பரிமாக் காதலித்

தூர்வர் (நான். 56:1-2)

(ஏ) மா Ma

விரைவு

'கடற்குட்டம் போழ்வர் கலவர்

படைக்குட்டம் பாய்மா உடையான்

உடைகிற்குந் - தோமில்

தவக்குட்டந் தன்னுடையான்

நீந்தும் - அவைக்குட்டம் கற்றான்

கடந்து விடும்' (நான். 18)

(ஐ) கடுமான் Katuman

விரைவு - speed

'கான்யாற்று ஒலியில் கடுமாந்தேர்

எந்தோழி மேனி தளிர்ப்ப வரும்'

(கார்.10: 3-4) -

(ஓ) மான் Man

விரைவு

'இடுமணல் எக்கர் அகன்கானற்

சேர்ப்பன் கடுமான் மணி

அரவமென்று ' (ஐந்.எழு.57: 1-2)


(ஓ) குதிரை மனையில் புகுதல்

Kutirai manaiyil pukutal

(10) தீமை, அழிவு, இறப்பு - (bad

omen), death

'சொலத் தகாத் துன் நிமித்தங்கள்

எங்கணும் வரத் தொடர்வ

ஒன்னார் வெலத் தகா அமரரும்

அவுணரும். செருவில் விட்டன

விடாத குலத்த கால் வயநெடுங்

குதிரையும் அதிர் குரல் குன்றும்

இன்று வலத்த கால் முந்துறத் தந்து

நம் மனையிடைப் புகுவ மன்னோ '

(கம்ப.யுத்.106)

(ஔ) வலிமையுடைய குதிரை

தூங்கி வீழ்தல் Valimaiyutaiya

kutirai tihku viltal

தீமை, அழிவு, இறப்பு


79.