பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவண்


" .. .. .. தூங்கி மீளி

மொய்ம்புடை இவுளி

வீழ்கின்றன' (கம்ப ஆரண்.430: 2-

3)

(க) குதிரை முதலில் வலக்காலை

தூக்கி வைத்தல் Kutirai mutalil

valakkalai tikki vaittal

(11) மங்கலம்

'மட்டவிழ் அலங்கல் வீரர்

சேர்தலும் வலத்து முன்னால்

கொட்டிய - குரத்த வாலித்து

எழுந்தன கூந்தல் வெம்மா'

(சூளா .840: 3-4)

(ங) ஓடும் இயல்புடைய

குதிரைகளின் கண்களில் கண்ணீர்

ஒழுகுதல் Otum iyalputaiya

kutiraikalin kankalil kannir olukutal

(tears in horse's eyes)

(12) தீமை, இறப்பு, அழிவு - evil

omen

... ... ... ... கண்கள்

ஒழுகுகின்றன ஓடு இயல் ஆடல்

மா' (கம்ப.யுத்த.3614:2-3)

கவண் Kavan (sling)

(1) விரைவு | வேகம் - speed

'கடு விசைக் கவணின் எறிந்த சிறு

கல்' (அகம்.292: 11)

(ஆ) கவணை Kavanai

விரைவு | வேகம் - speed

'கடுவிசைக் கவணையில் கல் கை -

விடுதலின்' (கலி. 41: 10)

(இ) கவண் எறிகல் Kavan erikal

விரைவு

'தவமுயல்வோர் மலர் பறிப்பத்

தாழவிடு -- கொம்புதைப்பக்

கொக்கின் காய்கள் கவண் எறிகல்

போல் சுனையிற் - கரைசேரப்

புள்ளிரியும் கழுமலமே'

(திருஞான. தேவா.3847: 5-8)

கவந்தங்கள் ஆடுதல் - Kavantankal

atutal (headless bodie's dance)


கழங்கு


(1) தீமை, தோல்வி - evil, failure -

'.. .. .. உச்சியின் அதிர்தரு

கவந்தங்கள் ஆடி இட்டவே'

(சூளா . 1220: 3-4)

கவரிமான் (a deer) பார். ‘மான்'

கவறு Kavaru (dice)

(1) நிலையாமை - unstability

'கவறு பெயர்த்தன்ன நில்லா

வாழ்க்கை இட்டு அகறல்

ஓம்புமின், அறிவுடையீர்! என'

(நற்.243: 5-6)

(2) அக வாழ்வு - personal life

'கவறு உற்ற வடு ஏய்க்கும், காமரு

பூங் கடற் சேர்ப்ப ' (கலி, 136: 4)


(ஒப்பு) - Dice எண் குறியீட்டியல்,

சமம், புனிதம், மும்மை ;

நற்பேற்றின் நிலையாமை,

பொய்ம்மை , வரம்பு மீறிய

ஒழுக்கக்கேடு.

கவிர் Kavir

(1) சிவப்பு நிறம் - red

'கார் அணி கூந்தல், கயற் கண்,

கவிர் இதழ்' (பரி.22: 29)

கவை முள் Kavai mul

(1) பாதுகாப்பு - safety -

'இன நல் மாச் செலக் கண்டவர்

கவை முள்ளின் புழை

அடைப்பவும்' (புறம்.98: 7-8)

கழங்கு Kalaiku

(1) குறிப்பு - note, mark

'கட்டினும் கழங்கினும் வெறியென

இருவரும்' (தொல்.1061)

(2) முன்னுணர்தல் - foretell, predict

'அணங்கறி கழங்கில் கோட்டம்

காட்டி ' (நற்.47: 8) -

(3) மீயாற்றல் - supernatural power

'வணங்குறு கழங்கின் முதுவாய்

வேலன்' (நற்.282: 5)

(4) அறிதல், வெளிப்படுத்துதல் -

know, reveal


80