பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழுநீர்

ஒண்டொடி இயக்கி யாரும்

ஊளையிட்டுப் புலம்பி ஓடக்

கண்டனம் என்று சொன்னார்

கையறு - கவலை யுற்றார்'

(பெரிய 28: 638) -


(ஒப்பு) - Ass, Donkey அடக்கம்,

அமைதி, அறிவாற்றல், கடும்

உழைப்பு, சிறந்த தன்மை, சுமை

தாங்குதல், நடுநிலைமை, நேர்மை,

முன்னறிதிறம், மீட்பு, விழிப்பான

தன்மை, வீடுபேறு; அறியாமை,

இறப்பு, கணவனை

ஏய்த்தொழுகல், கழிகாமம்,

காட்டியல்பு, கேலிக்குரிய நிலை,

செருக்கு, சோம்பல், தகுதியற்ற

நிலை, நிலையாமை, பிடிவாத

நிலை, பொறாமை, மன

உறுதியின்மை, முட்டாள்தனம்,

மென்னய. உணர்ச்சி ஈடுபாடு,

வறுமை, வீணாகக் கீழ்ப்படிதல்,

வீணான பேச்சாளர்.

கழுநீர் Kalunir (a flower)

(1) பரத்தை - prostitute

'கழுநீர் மேய்ந்த கருந்தாள் எருமை'

(நற்.260: 1)

(2) தாழ்வு - low

'கழுநீருள் காரடகேனும் ஒருவன்

விழுமிதாக் கொள்ளின்

அமிழ்தாம்' (நாலடி.217: 1-2)

(3) அன்பு - love

'கைவயிற் கொண்ட கழுநீர்

நறும்போது கொய்மலர்க் கண்ணி

கொடுப்போள் போலக் கனவில்

தோன்ற கண்படை, இன்றி நனவில்

தோன்றிய நறுநுதல் சீறடி

மைவளர் கண்ணியை எய்தும்

வாயில் யாதுகொல் என்றுதன்

அகத்தே நினைஇ' (பெருங் மகத.7:

63-68)

(ஆ) நீலம் Nilam

(4) தண்மை , - நறுமணம் - cool,

fragrant

'கண் போல் நீலம் தண் கமழ்

சிறக்கும்' (நற்.273: 8)

(5) மாலைக்காலம் | அஸ்தமனம் -

evening, sunset -


கழுநீர்:


'நீல இருங் கழி நீலம் கூம்பும்

மாலை வந்தன்று' (ஐங். 116: 2-3)

(6) கார்காலம், அழுகை - rainy

season, crying:

'சுனை மாண் நீலம் கார்

எதிர்பவை போல், இனை நோக்கு

உண்கண் நீர் நில்லாவே'

(கலி. 7: 11-12) -

(7) அழகு - beautiful

'நீடு இதழ் தலைஇய கவின் பெறு

நீலம்' (அகம்.38: 10)

(இ) குவளை kuvalai

(8) தலைவி - heroine

'.... .. .. .. குவளை வண்டுபடு

மலரின் சாஅய்த் தமியென்; மன்ற

அளியேன் யானே' (குறு.30: 4-6)

(9) குளிர்ச்சி - cool

'.. .. .. .. பைஞ் சுனைப் பாசடை

நிவந்த பனி மலர்க் குவளை'

(ஐங்.225: 1-2)

(10) அழகு - beautiful

'கொன்றைப் பூவின் பசந்த

உண்கண், குன்றக நெடுஞ் சுனைக்

குவளை போல, தொல் கவின்

பெற்றன இவட்கே ' (ஐங்.500: 1-3)

(11) வளம் - prosperous -

'பன்னாள் தொழில்செய் துடைய

கவர்ந்துண்டார் இன்னாமை

செய்யாமை வேண்டி இறைவற்குப்

பொன் யாத்துக் கொண்டு புகுதல்

குவளையைத் தன்னாரால் யாத்து

விடல்' (பழமொழி.279)

(12) மேன்மக்கள் - noble

'ஒருநீர்ப் பிறந்தொருங்கு நீண்டக்

கடைத்தும் விரிநீர்க் குவளையை

ஆம்பல் ஒக்கல்லா பெருநீரார்

கேண்மை கொளினு. நீரல்லார்

கருமங்கள் வேறு படும்'

(நாலடி.236) .

(13) பரத்தை - prostitute

'செங்கண் கருங்கோட்டு எருமை

சிறுகனையால் அங்கட் கழனிப்

பழனம்பாய்ந் தங்கட் குவளையம்

பூவொடு செங்கயன்மீன் சூடித்

தவளையும் மேற்கொண்டு வரும்'

(திணைமாலை.147)

(13) நெய்தல் திணை

'மோடு உடைந்தன மூரிக்

குவளையும்' (சூளா.20: 2)