பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கழை


(14) கருமை

'கார் இருள் குவளைக் கண்ணிக்

கதிர்நகை கனபொன் தோட்டு'

(சூளா .759: 1)

(ஈ) நீருள் குவளை வேதல் nirul

kuvalai vetal

(14) கொடுமை, தீமை, துன்பம் - cruel,

evil, suffer

'... .. .. .. மலைநாடன் ஈரத்துள்

இன்னவை தோன்றின், நிழற்

கயத்து நீருள் குவளை வெந்தற்று'

(கலி, 41: 29-31)

(உ) காவி kavi

(15) இனிமை | இன்பம் - pleasure /

happyness

'.. .. .. .. காலைக் கள் நாறு

காவியொடு தண்ணென மலரும்'

(அகம்.150: 10-11)

(19) கருமை

'காவி ஆகின்ற கருமா

மழைக்கண்ணி ' (சூளா .1118: 1)


(ஊ) கழுநீர் பிடித்திருத்தல்

Kalunir pitittiruttal

(20) அரசத் தன்மை

'காசின் மாமணிச் சாமரை

கன்னியர் வீச மாமகரக் குழை

வில்லிட வாச வான் கழுநீர்

பிடித்தாங்கரி ஆசனத்திருந்தான்

அடன் மொய்ம்பினான்'

(சீவக.429)

(எ) கழுநீர் மாலை Kalunir malai

(21) புனிதம், இறையமைதி - holy,

divine

'கழுநீர் மாலைக் கடவுள் போற்றி'

(திருவா.4: 217)


கழை (bamboo) பார். ‘வேய்'


கள் Kal (toddy)

(1) களிப்பு, மயக்கம், காமம் -

happyness, intoxication, lust

'இரு மடைக் கள்ளின் இன் களி

செருக்கும்' (நற்.59: 5)

(2) இனிமை - sweet


கள்


'ஓங்கித் தோன்றும், தீம் கள்,

பெண்ணை ' (நற்.323: 1)

(3) வளமை - prosperous

'மாரி அம் கள்ளின், போர் வல்

யானை ' (பதி.21:17)

(4) காமம் - lust

'ஆறு அல்ல மொழி தோற்றி,

அறவினை கலக்கிய, தேறுகள்

நறவு உண்டார் மயக்கம்போல்,

காமம் வேறு ஒரு பாற்று ஆனது

கொல்லோ ?' (கலி, 147: 1-3}

(5) மகிழ்ச்சி

'உள்ளக் களித்தலும் காண

மகிழ்தலும் கள்ளுக்கில்

காமத்திற்குண்டு' (குறள். 1281)

(6) உவகை - happyness

மாணாப் பகைவரை மாறெருக்

கல்லாதார் பேணா துரைக்கும்

உரைகேட் டுவந்ததுபோல்

ஊணார்ந் துதவுவது ஒன்றில்

லெனினும் கள்ளினைக் காணாக்

களிக்கும் களி' (பழமொழி.99)

(7) செவ்வியின்மை -

'கொடித்திண்டேர் மன்னரால்

கூட்டுண்டு வாழ்வார் எடுத்துமேற்

கொண்டவர் ஏய வினையை

மடித்தொழிதல் என்னுண்டாம்

மாணிழாய்! கள்ளைக் குடித்துக்

குழைவாரோ இல்'

(பழமொழி.266)

(8) பகைமை - enmity

தெள்ளி யுணரும் திறனுடையார்

தம்பகைக்கு உள்வாழ் பகையைப்

பெறுதல் - உறுதியே கள்ளினால்

கள்ளறுத்தல் காண்டும்

அதுவன்றோ முள்ளினால்

முட்களையு மாறு' (பழமொழி.308)

(ஆ) மது matu

களிப்பு / மகிழ்ச்சி - happyness

'பாகர் இறை வழை மது நுகர்பு,

களி பரந்து' (பரி. 11: 66)

(இ) தேறல் teral

களிப்பு | மகிழ்ச்சி - happyness

'மகிழ, களிப் பட்ட தேன் தேறல்

மாற்றி' (பரி, 16: 28)

(9) தண்மை , நறுமணம் - cool,

fragrant