பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள்வர்

'தண் கமழ் நறுந்தேறல் உண்பவள்

முகம் போல' (கலி.73: 4)

இனிமை - sweet |

'நனைக்கள்ளின் மனைக்கோசர்

தீ ம்தேறல் நறவுமகிழ்ந்து '

(புறம். 396: 7-8)

(10) வன்மை / கடுமை - hard, fierce

'பாம்பு வெகுண்டன்ன தேறல்

நல்கி' (சிறு.237) -

காமம்

'வேட்கைமை என்னும் நாவில்

காம வெந்தேறல் மாந்தி'

(சீவக.2729: 1)

(ஈ) தோப்பி toppi

இனிமை - sweet

'இல்அடு கள்இன் தோப்பி பருகி'

(பெரும்.142)

(உ) அரியல் ariyal

மகிழ்ச்சி - happy

'அரியல் ஆர்கையர், விளைமகிழ்

தூங்க' (அகம்.184: 14)

(ஊ) நறவு Naravu

மகிழ்ச்சி - happy

'நறவு மகிழ் இருக்கை நல் தேர்ப்

பெரியன்' (நற்.131:7)

வளமை - prosperous

'முழந்தாள் இரும்பிடிக் கயந்தலைக்

குழவி நறவுமலி பாக்கத்துக்

குறமகள் ஈன்ற' (குறு.394: 1-2)

(11) பயன் - use

'நல் அமிழ்து ஆக, நீ நயந்து

உண்ணும் நறவே' (புறம்.125: 8)

(ஒப்பு) Alcohol, Brandy, Cocktail,

Gin, Whisky, Wine அறிவாற்றல்,

இணக்கம், இளமை, உண்மை ,

ஏசுவின் குருதி, நிலைபேறான

வாழ்வு, மகிழ்ச்சி, மீட்பு, வியப்பு;

கழிகாமம், வன்முறை, வெறி,

கள்வர் Kalvar (thief)

(1) தலைவன், கொடுமை – hero, cruel

'கள்வர் போலக் கொடியன்மாதோ'

(நற்.28: 4)

(2) மறைப்பு - hide


கள்ளி


'நள்ளென் கங்குல், கள்வன் போல,

அகன் துறை ஊரனும் வந்தனன்'

(நற்.40)

(3) பொய்ம்மை - false / not trust worthy

'ஒருநின் பாணன் பொய்யனாக

உள்ள பாணர் எல்லாம் கள்வர்

போல்வர்நீ அகன்றிசி னோர்க்கே'

(குறு.127: 4-6)

(ஆ) கட்குத்திக் கள்வன் katkuttik

kalvan

(4) தலைவன், ஏமாற்றுதல் - hero,

cheating

'ஆ முனியா ஏறு போல், வைகல்

பதின்மரைக் காமுற்றுச் செல்வாய்;

ஓர் கட்குத்திக் கள்வனை; நீ எவன்

செய்தி, பிறர்க்கு ' (கலி.108: 49-51)

(இ) ஆறலை கள்வர் aralai kalvar

(highway robber)

(5) அருளின்மை - unmerciful

'ஆறு அலை கள்வர் படைவிட

அருளின் - மாறுதலை பெயர்க்கும்

மருவு இன் பாலை' (பொரு.21-22)

(ஈ) கள்வி kalvi|

(6) தலைவி - heroine

'இரண்டு அறி கள்வி நம்

காதலோளே' (குறு.312: 1)

(ஒப்பு) Thief காலம்; இறப்பு.

கள்ளி Kalli (cactus)

(1) வறட்சி - drought

'பெயல் மழை துரந்த புலம்பூறு

கடத்துக் கவைமுடக்

கள்ளிக்காய்விடு கடுநொடி'

(குறு.174: 1-2)

(2) தீமை - evil

'தீது உறு கள்ளிஅம் காடு

இறந்தோரே' (ஐங்.தி.1: 4)

(3) இழிவு - mean

'கள்ளி யகிலும் கருங்காக்கைச்

சொல்லும்போல் எள்ளற்க

யார்வாயின் நல்லுரையைத் -

தெள்ளிதின் ஆர்க்கும் அருவி

மலைநாட! நாய்கொண்டால்