பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

களிறு

(1) இருள், கருமை - darkness,

blackness

'பரிய களிற்றை அரவு விழுங்கி

மழுங்க இருள்கூர்ந்த கரிய

மிடற்றர் செய்ய மேனிக் கயிலை

மலையாரே'

(திருஞான. தேவா 3459: 5-8)

களிறு (elephant) - பார். யானை'

களிறு கவுளடுத்த எறிகல் Kaliru

kawlatutta erikal

(1) மறைவான ஆற்றல் - concealed

strength

'களிறு கவுளடுத்த எறிகல் போல,

ஒளித்த துப்பினை ஆதலின்'

(புறம்.30: 8-9)

(ஆ) கல் கவுள் கொண்ட களிறு

Kal kavul konta kaliru

மறைவு - hidden

'காய்ந்தெறி கடுங்கல் தன்னைக்

கவுள்கொண்ட களிறுபோல,

ஆய்ந்தறி உடையராகி அருளொடு

வெகுளி மாற்றி, வேந்தர்தாம்

விழைய எல்லாம் வெளிப்படார்

மறைத்தல் கண்டாய்' (சீவக.2910)

களிறுண் விளங்கனி Kalirun vilaikani

(1) அழிவு - ruin

'மேவு செல்வம் களிறுண்

விளங்கனி ஆவதாக அழியவும்

அன்பினால்' (பெரிய,915: 1-2)

(ஆ) உலங்கு உண்ட விளங்கனி

Ulaiku unta vilaikani

(2) உள்ளீடின்மை

'உலங்கு உண்ட விளங்கனிபோல்

உள் மெலியப் புகுந்து என்னை

(நாலா.582: 5-6)


களை Kalai

(1) பொய்ம்மை

பொய்ம்மையாம் களையை வாங்கி'

(திருநா. தேவா.2921:3)


கற்சிறை Karcirai (dam)

(1) தடை, தடுப்பு - obstacle


கற்பகப் பூங்கா



'வரு புனல் கற்சிறை கடுப்ப, இடை


அறுத்து, ஒன்னார் ஒட்டிய

செருப்புகல் மறவர்' (மது.725-726)

கற்சுனை Karcunai (rock fountain)

(1) கடவுட்டன்மை - divine

'கடவுள் கற்சுனை அடை இறந்து

அவிழ்ந்த ' (நற்.34: 1)

கற்பகம் Karpakam (a divine tree)

(1) வள்ளன்மை - benevolence

'கற்பகம் அனைய வள்ளல் கருங்

கழல் கமலக் கால்மேல்'

(கம்ப.யுத்.2837: 3)

(2) ஈகை - giving

'கணிதம் இல்லாக் கற்பகம்

கந்துக்கடன் ஒத்தான்' (சீவக.365:

3)

(3) நல்வினை - good deeds -

'நல்வினை என்னும் நன்பொற்

கற்பக மகளிரென்னும்'

(சீவக.2728: 1)

(ஆ) காய்தழல் கவரப்பட்ட

கற்பக மரம் Kaytalal kavarappatta

karpaka maram

(4) பிரிவுத்துன்பம்

'காய்தழல் கவரப்பட்ட கற்பக

மரத்தின் கன்றி சூழ்கழல் குருசில்

வாடி அற்புத்தீ அழலுள் நிற்ப

(சீவக.1707: 1-2)

(இ) தேவேந்திர தாரு Tévéntira

taru

(5) கொடை

'பாவேந்தர் காற்றில் இலவம்

பஞ்சாகப் பறக்கையிலே

தேவேந்திர தாரு ஒத்தாய் ரகுநாத

சயதுங்கனே' (தனிப்.505:3-4)

கற்பகப் பூங்கா Karpakap punka

(garden of divine tree)

(1) கொடை

'இடுவோர் சிறிதிங்கு இரப்போர்

பெரிது கெடுவாய் நமனே

கெடுவாய் - படுபாவி கூவத்து

நாரணனைக் கொன்றாயே