பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனவு


(2) மயக்கம் - confusion / bewilderment

'கண்துயில் மறுத்தல் கனவொடு

மயங்கல்' (தொல். 1216) - -

(3) பொய்ம்மை - false / untrue

'கண்ணினும் கனவினும் காட்டி'

(நற்.173:5)

(4) ஏமாற்றம் - cheat, disappoint,

beguile

'இன் துயில் எடுப்புதி கனவே

எள்ளார் அம்ம துணைப்பிரிந்

தோரே' (குறு.147: 4-5)

(5) விருப்ப நிறைவேற்றம் - wish

fulfilment)

'கனவில் தொட்டது கைபிழை

யாகாது நனவிற் சேஎப்பநின்

நளிபுனல் வையை'

(பரி. 8: 103-104)

(6) பயனின்மை - useless

'நனவினான் வேறாகும் வேளா

முயக்கம் கனவினான் எய்திய

செல்வத்து அனையதே'

(கலி, 68: 21-24)

(7) அழகு - beautiful

'கனவு எனப்பட்டது ஓர் காரிகை

நீர்த்தே ' (கலி. 92: 2)

(8) நிலையின்மை - unstability

'கனவின் நிலையின்றால், காமம்'

(கலி.145:3)

(9) பொய்யானது, இல்லாதது -- untrue,

non existant

'வறுங்கை காட்டிய வாய் அல்

கனவின்' (அகம்.39: 23)

(10) உண்மைத் தோற்றம் - truthful

appearance |

'நனவின் வாயே போல துஞ்சுநர்க்

கனவு ஆண்டு மருட்டலும் உண்டே '

(அகம்.158: 10-11)

(11) இன்பம் - pleasure

'கனவினான் உண்டாகும் காமம்

நனவினான் நல்காரை நாடித்

தரற்கு' (குறள். 1214)

(12) முன்னறிவிப்பு - foretell

'கல்லாதான் கண்ட கழிநுட்பம்

கற்றார்முன் சொல்லுங்கால்

சோர்வு படுதலால் - நல்லாய்

வினாமுந் துறாத உரையில்லை

இல்லை கனாமுந் துறாத வினை'

(பழமொழி.12)

(ஆ) கனா kand


கனவு



பொய்ம்மை- false

'வாய்த் தகைப் பொய்க் கனா

மருட்ட' (குறு.30: 3)

(13) விருப்பம் - desire

'ஓர்த்தது இசைக்கும் பறை போல்,

நின் நெஞ்சத்து வேட்டதே

கண்டாய் கனா' (கலி.92: 21-22)

(14) அச்சம் - fear, dread

'பஞ்சி அடிப் பவளத்துவர்

வாயவள் துஞ்சும் இடைக்கனா

மூன்று அவை தோன்றலின் அஞ்சி

நடுங்கினள் ஆயிழை ஆயிடை'

(சீவக.219: 1-2)

(15) தீமை , அழிவு - evil omen,

destruction

'போக மகளிர் வலக் கண்கள்

துடித்த பொல்லாக் கனாக்கண்டார்

ஆக மன்னற்கு ஒளிமழுங்கிற்று'

(சீவக.2173: 1-3)

(இ) வாவல் கனவு vaval kanavu

(16) அரிய விருப்பம் – rare desire

'உள் ஊர் மாஅத்த முள் எயிற்று

வாவல் ஓங்கல் அம் சினைத் தூங்கு

துயில் பொழுதின், வெல் போர்ச்

சோழர் அழிசிஅம் பெருங் காட்டு

நெல்லி அம் புளிச் சுவைக்

கனவியா அங்கு ' (நற்.87: 1-4)

(ஈ) வண்டு கனவு vantu kanavu

(17) வளமை - prosperous

'கூம்புமுகை அவிழ்த்த

குறுஞ்சிறைப் பறவை வேங்கை

விரிஇணர் ஊதி, காந்தள்

தேனுடைக் குவிகுலைத் துஞ்சி.

யானை இருங்கவுட் கடாஅம்

கனவும்' (அகம், 132: 10-14)

(உ) கடற்காக்கை கனவு

katarkakkai kanavu

(18) உவப்பு - happy

'கடற்சிறு காக்கை காமர்

பெடையொடு கோட்டுமீன்

வழங்கும் வேட்டம்மடி பரப்பின்

வெள் இறாக் கனவும் நள்ளென்

யாமத்து' (அகம்.170: 10-12)

(ஊ) கவரி கனவு kavari kanavn

(19) வேட்கை - desire