பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கனவு


'கவிர்ததை சிலம்பில் - துஞ்சும்

கவரி பரந்திலங்கு அருவியொடு

நரந்தம் கனவும்' (பதி.11: 21-22)

(எ) துஞ்சூமன் கண்ட கனா

Tuncuman kanta kana -

(20) பயனின்மை - futile

வாளைமீன் உள்ளல்

தலைப்படலும் ஆளல்லான்

செல்வக் குடியுள் பிறத்தலும் -

பல்லவையுள் அஞ்சுவான் கற்ற

அருநூலும் இம்மூன்றும்

துஞ்சூமன் கண்ட கனா' (திரி.7)

(ஏ) எல்லிருள் கனவு Ellirul

kanavu

(21) நன்மை , எதிர்பார்ப்பு - good

omen, hope

'எல்லிருள் கனவில் கண்டேன்

கண்ணிடன் ஆடும் இன்னே'

(சீவக.1909: 1)

(ஐ) கனவில் கண்ட பொருளை

நனவில் பெறுதல் Kanavil kanta

porulai nanavil perutal

(22) உவகை, மகிழ்ச்சி - gladness, joy

'கனவில் கண்ட கண்ணார்

விழுப்பொருள் நனவில் பெற்ற

நல்குரவன் போல் உவந்த

மனத்தின் விரைந்தெழுந்து

யூகியும்' (பெருங் உஞ்.43: 104-106)


(ஓ) ஊமனார் கண்ட கனவு

Umanar kanta kanavu

(23) வீண் - futile

'ஊமனார் கண்ட கனவிலும் பழுது

ஆய் ஒழிந்தன கழிந்த அந்நாள்கள்'

(நாலா.950: 3-4) (4)

(ஓ) யானை கனவில் தோன்றுதல்

Yanai kanavil torrutal

(24) ஆற்றல், வெற்றி

'எழீ இயவண் இயக்கப் பொழிமத

யானை வேண்டிய செய்தலின்

ஈண்டிய மாதவன் பள்ளிக்கு

உய்ப்ப நள்ளிருள் கூறும் பாகர்

ஏறினும் தோற்கயிறிடினும் நீ முன்

உண்ணினு நீங்குவல் யானென

காக்கை



ஆகு பொருள் கேட்டு அறிவுற்று

எழுந்து' (பெருங். இலா.11: 116-121)

(ஔ) வைகறை யாமத்துக் கனவு

Vaikarai yamattuk kanavu

(25)

'மேலையம் பாற்கடல் வெள்ளேறு

கிடந்த வாலிதழ் நறுமலர்

வைகறை யாமத்துக் கனவின்

மற்றவன் கையிற் கொடுத்து

வினையின் எதிர்பொருள்

விளங்கக் காட்டென'

(பெருங்.நர.3: 194-197)

(ஒப்பு) Dream அனுபவம்,

உண்மை, சேய்மை உணர்வு,

வாழ்க்கை; பொய்ம்மை.


கனி (fruit) பார். 'பழம்'

காக்கை Kakkai (crow)

(1) தலைவன் - hero

'அகல் அங்காடி அசை நிழல்

குவித்த பச்சிறாக் கவர்ந்த பசுங்

கட் காக்கை தூங்கல் வங்கத்துக்

கூம்பில் சேக்கும்' (நற்.258: 7-9)

(2) சுற்றம் தழுவல் – cherishing kinded

'கொடுங் கண் காக்கைக் கூர் வாய்ப்

பேடை நடுங்கு சிறைப் பிள்ளைத்

தழீஇ, கிளை பயிர்ந்து, கருங் கண்

கருனைச் செந்நெல் வெண் சோறு

சூருடைப் பலியொடு கவரிய,

குறுங் கால் கூழுடை நல் மனைக்

குழுவின இருக்கும்' (நற்.367: 1-5)

(3) இறப்பு - death

'கருங்கட் காக்கையொடு கழுகு

விசும்பு அகவ, சிறு கண் யானை

ஆள் வீழ்த்துத் திரிதரும்'

(ஐங்.324: 2-3)

(4) கீழ்மை / ஏமாற்றம் – low / cheat,

deceive

'ஊக்கி உழந்தொருவர் ஈட்டிய

ஒண்பொருளை நோக்குமின்

என்றிகழ்ந்து நொவ்வியார்

கைவிடுதல் போக்கில் நீர் தூஉம்

பொருகழித் தண்சேர்ப்ப

காக்கையைக் காப்பிட்ட சோறு'

(பழமொழி.208)

(5) பகை - enmity