பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சி


(ஒப்பு) - Crow, Raven இறைநிலை,

வலிமை, கடவுள் நம்பிக்கை,

தூதுவர், நீண்ட நாள் வாழ்வு,

படைப்பு, மாற்றம், முன்னறிதிறம்,

வளமை, விடியல்; அழிவு, இருள்,

இறப்பு; கழிபேரின்பம், செருக்கு,

தந்திரம், தீமை, பழிவாங்கும்

எண்ணம், வன்பறிக்கொள்ளை,

ஏமாற்றுதல்.

காஞ்சி Kanci (a tree)

(1) பெருந்திணை - love excess

'காஞ்சி தானே பெருந்திணைப்

புறனே' (தொல்.1023)

(2) நிலையாமை - unstability .

'பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்

றானும் நில்லா உலகம் புல்லிய

நெறித்தே ' (தொல்.1024)

(3) செழிப்பு - fertile

'நீர்த் தாழ்ந்த குறுங் காஞ்சிப் பூக்

கதூஉம் இன வாளை'

(புறம்.18: 7-8)

(4) அழகு / இன்பம் - beautiful /

pleasure

'பொய்கை மேய்ந்த செவ்வரி

நாரை தேம் கொள் மருதின்

பூஞ்சினை முனையின் காமரு

காஞ்சித் துஞ்சும்' (புறம்.351:9-11)

(5) தீ நட்பு

'கடையாயார் நட்பேபோல் காஞ்சி

நல்லூர! உடைய இளநலம்

உண்டாய் கடையக் கதிர்முலை

ஆகத்துக் கண்ணன்னார் சேரி

எதிர்நலம் ஏற்று நின்றாய்'

(திணை .ஐம்.33)

காஞ்சி (பண்) Kanci (a melody)

(1) பாதுகாப்பு - safety

'இசை மணி எரிந்து, காஞ்சி பாடி,

நெடு நகர் வரைப்பில் கடி நறை

புகைஇ, காக்கம் வம்மோ - காதல்

அம் தோழி' (புறம்.281: 5-7)

காஞ்சிரங்காய் Kaiciraikay (a bitter

poisonous fruit)

(1) வெறுப்பு, கசப்பு, தீமை - hatred,

bitter, evil

'கழுநீருள் காரடகேனும் ஒருவன்

விழுமிதாக் கொள்ளின்

காடு


அமிழ்தாம் விழுமிய

குய்த்துவையார் வெண்சோறே

ஆயினும் மேவாதார்

கைத்துண்டல் காஞ்சிரங் காய்'

(நாலடி.217)

(ஆ) காஞ்சிரம் Kanciram

(2) இழிவு, துன்பம் - low, suffering

'உயர்வரைத் தேனை உண்பார்

வருத்தும் காஞ்சிரமும் வேம்பும்

வாய்க்கொள்வார் யாவர்

சொல்லாய்' (சீவக.2722: 6-8)

காஞ்சிரை Kancirai (a tree)

(1) பயனின்மை / கீழ்மை - useless /

low

'ஊழாயினாரைக் களைந்திட்

டுதவாத கீழாயி னாரைப்

பெருக்குதல் - யாழ்போலும்

தீஞ்சொல் மழலையாய்! தேனார்

பலாக்குறைத்துக் காஞ்சிரை நட்டு

விடல்' (பழ.104)

காடு Katu (forest)

(1) மறைவு - hide

'புறவு அணி கொண்ட பூ நாறு

கடத்திடை, கிடின் என இடிக்கும்

கோல் தொடி மறவர் வடி நவில்

அம்பின் வினையர் அஞ்சாது

அமரிடை உறுதர, நீக்கி, நீர்

எமரிடை உறுதர ஒளித்த காடே'

(நற்.48: 5-9)

(2) கடுமை - hard

'நெய்த்தோர் அன்ன செவிய

எருவை கற்புடை மருங்கில்

கடுமுடை பார்க்கும் காடு நனி

கடிய என்ப' (ஐங்.335:2-4)

(3) துன்பம் - suffer

'துன்புறூஉம் தகையவே காடு'

(கலி, 11:11)

(4) கொடுமை - cruel

'கடுங் குரை அருமைய காடு'

(கலி, 13:25)

(5) வெம்மை - heat

'அணை அரும் வெம்மைய காடு'

(கலி. 20: 20)

(6) அச்சம் - fearful

'எதிர்த்த பகையை இளைதாய

போழ்தே கதித்துக் களையின்