பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காடு

முதிராதே தீர்த்து நனிநயப்பச்

செய்தவர் நண்பெல்லாந் தீரத்

தனிமரம் காடாத லில்' (பழ.286)

(ஆ) கான் kan

(7) வளமை - prosperous

படு மழை பொழிந்த பாறை

மருங்கில் சிரல் வாய் உற்ற

தளவின், பரல் அவல், கான் கெழு

நாடற் படர்ந்தோர்க்கு' (நற்.61:7-9)

(8) கடுமை , துன்பம் – hard, suffering

'ஆண்டலை வழங்கும் கான்

உணங்கு கடுநெறி' (பதி.25: 8)

(இ) கானம் kanam

(9) அழகு - beautiful

'தலை நாட்கு எதிரிய தண் பத

எழிலி அணி மிகு கானத்து அகன்

புறம் பரந்த' (நற்.362:3-4)

(10) விரிவு - broad

‘மரந்தலை மணந்த நனந் தலைக்

கானத்து' (நற்.394: 1)

(11) இன்னாமை | துன்பம் - suffering

'நீர்நசை வேட்கையின்

நார்மென்று தணியும், இன்னாக்

கானமும், இனிய' (குறு.274: 5-6)

கொடுமை - cruel

'புல் அரை ஓமை நீடிய புலி

வழங்கு அதர கானத்தானே'

(ஐங்.316: 4-5)

(12) இறப்பு - death

'புண் உமிழ் குருதி பரிப்பக்

கிடந்தோர் கண் உமிழ் கழுகின்

கானம் நீந்தி' (அகம்.31: 10-11)

(13) இருள் - dark

'கொய் அகை முல்லை காலொடு

மயங்கி, மை இருங் கானம் நாறும்

நறு நுதல்' (அகம்.43:9-10)

அச்சம் - fear

'அஞ்சுவரத் தகுந கானம் நீந்தி'

(அகம்.63: 9)

(14) நிலைபேறு - stability

'மலையும், சோலையும், மாபுகல்

கானமும், தொலையா நல்இசை

உலகமொடு நிற்ப' (மலை.69-70)

(ஈ) அத்தம் attam

(15) வறட்சி - dry, drought

காடு



'நீர் நசைக்கு ஊக்கிய உயவல்

யானை, இயம் புணர் தூம்பின்

உயிர்க்கும் அத்தம்' (ஐங்.377: 1-2)

துன்பம் - suffering

'.. .. .. .. அன்போடு அருள் புறம்

மாறிய ஆர் இடை அத்தம்'

(கலி. 15: 8-9)

அச்சம் - fear

'அருஞ் சுரம் செல்வோர் நெஞ்சம்

துண்ணென, குன்று சேர் கவலை,

இசைக்கும் அத்தம்' (அகம்.87:9-10)

(16) இறப்பு / ஆபத்து - death / danger

'சுரம் கெழு கவலை கோட்பால்

பட்டென, வழங்குநர் மடிந்த

அத்தம் இறந்தோர்'

(அகம்.109: 9-10)


(உ) கடறு kataru

(17) பயன் - use

'பல் பயன் நிலை இய கடறுடை

வைப்பின்' (பதி. 78: 7)

வளமை - prosperous

'மலைபயந்த மணியும், கடறுபயந்த

பொன்னும்' (புறம்.377: 16)

(ஊ) கடம் katam

அச்சம் - fear

'உதிர்த்த கோடை, உட்குவரு

கடத்திடை ' (அகம். 267: 5)

(எ) காட்டகம் kattakam

பயன் - use

'மரம் கொல் தச்சன் கைவல்

சிறாஅர் மழுவுடைக் காட்டகத்து

அற்றே ' (புறம்.206: 11-12)

(ஏ) சுரம் Curam

துன்பம் - affliction

'தலைதண்டம் ஆக சுரம்போதல்

இன்னா ' (இன்னா . 12: 1)

(ஒப்பு) Forest அழகு, பூமி,

பெண்மைக் கொள்கை, மயக்க

நிலை, மறைவு; அசுர சக்திகள்,

ஆபத்து; வேட்டையாடுதல்.