பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கால்


'தீயும் வளியும் விசும்பு

பயந்தாங்கு, நோயும் இன்பமும்

ஆகின்றுமாதோ ' (நற்.294: 1-2)

(9) வலிமை - strength

'வெந் திறல் கடு வளி பொங்கர்ப்

போந்தென' (குறு.39: 1)

(10) அளவின்மை - limitless

'நிலம், நீர், வளி, விசும்பு என்ற

நான்கின் அளப்பு அரியையே'

(பதி.14: 1-2)

விரைவு | வேகம் - speed

'மணம் மிக நாறு உருவின விரை

வளி மிகு கடு விசை' (பரி.1:24)

(11) ஆற்றல் - power

'உந்து வளி கிளர்ந்த ஊழ் ஊழ்

ஊழியும்' (பரி.2: 7)

(12) உயிர்ப்பு - breath

'இரண்டின் உணரும் வளியும்

நீயே ' (பரி.13: 19)

(13) சினம் - angry

'காய் சினக் கடு வளி எடுத்தலின்'

(அகம். 223: 6)

(14) உயர்ச்சி - high

'வான் வழங்கு இயற்கை வளி

பூட்டினையோ ?' (அகம்.384: 9)

இயக்கம் - active

'வளி கிளர்ந்தன்ன செலவினர்'

(திருமுரு.170)

(15) திறன் - ability

'தீயன வல்ல செயினும்

திறல்வேந்தன் காய்வன சிந்தியார்

கற்றறிந்தார் - பாயும் புலிமுன்னம்

புல்வாய்க்குப் போக்கில் அதுவே

வளிமுன்னர் வைப்பாரம் இல்'

(பழமொழி.265)

(ஈ) புயல் puyal (cyclone)

(16) சினம், ஆண்மை - angry, manly

'பெருஞ் சினப் புயல் ஏறு

அனையை' (பதி.51: 28)

(17) அச்சம் - fear

'அஞ்சுவரு மரபின் வெஞ் சினப்

புயலேறு' (புறம்.211: 1)

விரைவு | வேகம்

'திரிந்த வேகத்த பாகர்கள்

தீர்ந்தன செருவில் புரிந்த

வானரத் தானையில் புக்கன

புயலின்' (கம்ப.யுத்.1432: 3-4)



கால்


(உ) காற்றின் திசையை மாற்றுதல்

karin ticaiyai marutal

(18) ஆற்றல் - power

'... .. .. .. வளி மாற்றுவன் என

தான் முன்னிய துறை போகலின்'

(பட்.272-273)

(ஊ) பெருவளி Peruvali (tempest)

(19) அழிவு - destruction

'திண்தோள் மறவர் எறியத்

திசைதோறும் பைந்தலை பாரில்

புரள்பவை நன்கு எனைத்தும்

பெண்ணை அம் தோட்டம்

பெருவளி புக்கு அற்றே '

(களவழி.24: 1-4)

(எ) ஊழிக்கால் Uikkal (aconian

tempest)

வேகம் - velocity|

'ஒள்ளிய பனைமீன் துஞ்சும்

திவலைய ஊழிக் காலின் வள்

உகிர் வீரன் செல்லும் விசை

பொர மறுகி வாரி' (கம்ப.சுந்.22:

2-3)

(ஏ) காரொடு வந்த கடுவளி

Karotu vanta katuvali (rain with strong

wind)

(20) இன்னாமையுடைய இன்பம்

painful pleasure

'ஈரிதழ்த் தாரோ இற்றை நாளால்

காரொடு உறந்தவிக் கடுவளி

நிமித்தம் ஊரொடு உறந்த உறுகண்

காட்டி இன்னா இன்ப நின்வயிற்

றருமெனத் தொன்னூலாளன்

தோன்றாக் கூற' (பெருங். உஞ்.47:

11-15)

(ஐ) சண்டக்கால் (புயற்காற்று)

Cantakkal)

விரைவு

'மேல்கொண்ட பாகர் கண்டு

விசைகொண்ட களிறூ

சண்டக்கால் கொண்டு போவார்

போலக் கடிது கொண்டகலப்

போக' (பெரிய,8. 14)

(ஓ) வெங்கால் Venkal

விரைவு


97