பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

'கால் கழி கட்டில்


'அங்கையின் மழுவும் தாமும்

அனலும் வெங்காலும் என்னப்

பொங்கிய விசையில் சென்று'

(பெரிய.8. 22)

(ஓ) பவணம் Pavanam

(21) விரைவு | வேகம், கொடுமை

'பவணத்து அன்ன வெஞ்சிறை

வேகத் தொழில் பம்ப

(கம்ப. யுத்.3783: 2)

(ஒப்பு) Wind, Storm ஆன்மா ,

இலேசான தன்மை, உணர்வுகள்,

உந்துதலுக்கான ஊடுபொருள்,

உயிரின் உள்ளியல்பு,

எண்ணங்கள், சுதந்திரம்,

செயல்படுத்துகிற திறன்,

சொல்லாற்றல், நிலைபேறு,

நினைவுகள், புலப்படாத்தன்மை,

பொருள் தன்மையற்ற நிலை,

முடிவுற்ற நிலை,

வாசனைப்பொருள், வாழ்வு,

விமானம்,

கால் கழி கட்டில் Kal kali kattil (bier)

(1) இறப்பு - death

'பலர் மீது நீட்டிய மண்டை என்

சிறுவனைக் கால் கழி கட்டிலில்

கிடப்பி, தூ வெள் அறுவை

போர்ப்பித்திலதே!'

(புறம்.286: 3-5)

கால்கள் தடுமாறல் Kalkal tatumaral

(legs tripping)

(1) தீமை, அழிவு - evil, destruction

'கால்களும் தடுமாறாடிக் கண்களும்

இடமே ஆடி மேல்வரும்

அழிவுக்காக வேறுகாரணமும்

காணார்' (பெரிய 28.633)

காலக்கோள் Kalakkal

(1) அழிவு, தீமை, கேடு - harm,

damage

'கைகளின் தீண்டினள்

காலக்கோள் அனாள்'

(கம்ப.அயோ .136: 4)

காலை Kalai (morning)

(1) அழகு - beautiful

காவிரி



'கண் களி பெறூஉம் கவின் பெறு

காலை' (நற்.56:3)

(2) தண்மை - cool

'குருந்தோ டலம்வரும் பெருந்தண்

காலையும்' (குறு.148: 4)

(ஆ) வைகறை vaikarai

(3) துன்பம் | பிரிவு - suffering

seperation -

'தோள் தோய் காதலர்ப் பிரிக்கும்

வாள் போல் வைகறை

வந்தன்றால்' (குறு.157: 2-4)

(4) நன்மை - good

'நீர் அற்ற புலமே போல்

புல்லென்றாள், வைகறை, கார்

பெற்ற புலமே போல், கவின்

பெறும்' (கலி, 38: 11-12)

(5) நன்னம்பிக்கை - good faith, optimism

'.. .. .. .. பொதி அவிழ் வைகறை

வந்து, நீ குறை கூறி, வதுவை

அயர்தல் வேண்டுவல்'

(கலி. 52: 22-23)

(6) தொடக்கம் - start, beginning

'விடியல் வைகறை இடூஉம் ஊர'

(அகம்.196: 7)

(7) ஒளி - light

... ... ... இருள் நிலாக் கழிந்த

பகல் செய் வைகறை' (புறம்.394: 6)

(ஒப்பு) Morning ஆரோக்கியம்,

இளமை, உண்மை , ஒளி,

கடவுளின் ஆசி, காதல்,

குழந்தைப்பருவம், தூய்மை ,

தொடக்கம், நம்பிக்கை, நன்மை,

புத்துணர்ச்சி, மனித நீதி.

காவிரி Kaviri (a river)

(1) விரிவு - broad

'காவிரி மலிர் நிறை அன்ன நின்

மார்பு நனி விலக்கல்

தொடங்கியோளே' (ஐங் 42: 3-4)

(2) வளமை - prosperous

'வளம் கெழு சிறப்பின் உலகம்

புரைஇ. செங்குணக்கு ஒழுகும்

கலுழி மலிர் நிறைக் காவிரி

யன்றியும்' (பதி.50: 4-6)

(3) தாய்மை , பாதுகாத்தல் - motherly,

safely