பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காவிரி


'சையமால் வரைபயில் தலைமை

சான்றது செய்யபூ மகட்குநல்

செவிலி போன்றது வையகம்

பல்லுயிர் வளர்த்து நாடொறும்

உய்யவே சுரந்தளித்து ஊட்டும்

நீரது' (பெரிய.1: 2.3)

(4) அறம், அருள் - virtue, grace

'வண்ண நீள் வரைதர வந்த

மேன்மையால் எண்ணில்பேர்

அறங்களும் வளர்க்கும் ஈகையால்

அண்ணல் பாகத்தை ஆளுடைய

நாயகி உள்நெகிழ் கருணையின்

ஒழுக்கம் போன்றது' (பெரிய. 1: 2.6)

(5) தூய்மை - pure, holy

தொண்டனேன் பட்டதென்னே

தூய காவிரியின் நன்னீர்'

(திருநா. தேவா.2910: 1-2)

(ஆ) காவேரி Kaveri

தாய்மை - motherhood

'வாழி அவன் தன் ' வளநாடு

மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி

உய்க்கும் பேருதவி ஒழிவாய் வாழி

காவேரி' (சிலப்.7. 27)

(6) கற்பு - chastity|

'திங்கண்மாலை வெண்குடையான்

சென்னி செங்கோல் அது ஓச்சிக்

கங்கை தன்னைப் புணர்ந்தாலும்

புலவாய் வாழி காவேரி' (சிலப். 7.

2)

வளமை - fertile

'விழவ ரோதை சிறந்தார்ப்ப

நடந்த எல்லாம் வாய்காவா

மழவரோதை வளவன் தன்

வளனே வாழி காவேரி' (சிலப்.7:

2.3)

அருள் - grace -

'ஊழி உய்க்கும் பேருதவி

ஒழியாதொழுகல் உயிரோம்பும்

ஆழி ஆள்வான் பகல்வெய்யோன்

அருளே வாழி காவேரி' (சிலப்.7.

27)

(இ) பொன்னி மாநதி Ponni minati

(7) படைப்பு - creativity -

'மாலின் உந்திச்சுழி மலர்தன்

மேல் வரும் சால்பினால் பல்லுயிர்

தருதன் மாண்பினால் கோலநல்

குண்டிகை தாங்கும் கொள்கையால்

காழ்


போலும் நான்முகனையும்

பொன்னி மாநதி' (பெரிய, 1: 2.4)

(ஈ) காவிரி நீராடல் Kaviri niratal

(8) துயர் தீர்த்தல் - remove suffering

'உக்கவர் சுடுநீறணிந்து ஒளிமல்கு

புனல் காவிரிப் புக்கவர் துயர்

கெடுகெனப் பூசு வெண்பொடி

மேவிய' (திருஞான. தேவா.1804: 2-

3)

காழ் Kal (seed)

(1) ஆற்றல் / உறுதி - power / strong

'மறந்தனம் துறந்த காழ் முளை

அகைய' (நற். 172: 2)

(ஆ) வித்து vittu

(2) விளைவளம் - fertility

'சில வித்து அகல இட்டென, பல

விளைந்து' (நற்.209: 3)

வளமை - prosperous

'வித்தொடு சென்ற வட்டி பற்பல

மீனொடு பெயரும் யாணர் ஊர'

(நற்.210: 3-4)

(3) பயன் - use

'இசை நுவல் வித்தின் நசை ஏர்

உழவர்க்கு' (மலை .60)

(4) அறிவு - knowledge

'உரன் என்னும் தோட்டியான்

ஓரைந்தும் காப்பான் வரன்

என்னும் வைப்பிற்கு ஓர் வித்து'

(குறள்.24)

(5) அடிப்படை - basic

'நாணின்றி ஆகாது பெண்மை

நயமிகு ஊணின்றி ஆகா துயிர்

வாழ்க்கை - பேணுங்கால்

கைத்தின்றி ஆகா கருமங்கள்

காரிகையாய் வித்தின்றிச்

சம்பிரதம் இல்' (பழமொழி.327)

(6) மறுமை, மறுபிறப்பு

'மறுமைக்கு வித்து மயலின்றிச்

செய்து சிறுமைப் படாதேநீர்

வாழ்மின்' (நாலடி. 183:1-2)

(7) விருப்பு

'மெய்ம்மையாம் உழவைச் செய்து

விருப்பெனும் வித்தை வித்தி'

(திருநா.தேவா.2921: 1-2)

(9) வினை