பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளை


(11) பீடு - proud

'வாணுதல் கணவ! மள்ளர் ஏறே'

(பதி. 38: 10)

(12) கொலை - killing

'கொல்ஏறு சாட இருந்தார்க்கு'

(கலி.101: 41) |

வலிமை - strength

'வெறுத்த வய வெள் ஏற்று

அம்புடைத்திங்கள்' (கலி. 103: 48)

சினம் - angry

'கோடு அழியக் கொண்டானை

ஆட்டித் திரிபு உழக்கும் வாடா

வெகுளி எழில்ஏறு'

(கலி, 104: 41-42)

(13) சிறப்பு - special, great

'மலர்ந்த சிந்தையர் ஆகிய வணிகர்

ஏறனையார்' (பெரிய 7.30)

(இ) ஏறு தழுவுதல் eru taluvutal

(14) வீரம், அஞ்சாமை, புகழ் - brave,

fearless, fame

'கொல் ஏற்றுக் கோடு

அஞ்சுவா அனை மறுமையும்

புல்லாளே, ஆய மகள் அஞ்சார்

கொலை ஏறு கொள்பவர்

அல்லதை ' (கலி.103: 63-65)

(ஈ) விடை vitai

விரைவு - speed

'காற்றுப் போல் வந்த கதழ்விடைக்

காரியை' (கலி.103: 40)

வெற்றி, பீடு, பெருமிதம் -

victory, pride

'வென்றி - அடல்விடை

போல் நடந்து வீதி விடங்கப்

பெருமான் முன்பு' (பெரிய.1:

5.129)

வலிமை - strength

'அடல் விடையேறென்ன

அடர்த்தவனைக் கொல்லும்'

(பெரிய 9.37)

சினம்

'சின விடைப் பாகர் மேவும்

திருப்புலீச்சுரத்து முன்னர்'

(பெரிய 2.37)

(15) வேதம், வெற்றி

'தோடு உடைய செவியன் விடை

ஏறி ஓர் தூ வெண் மதி சூடி'

(திருஞன. தேவா. 1: 1)


காளை

(உ) பகடு pakatu

(16) வளமை - prosperous

'பால் பல ஊறுக! பகடு பல

சிறக்க!' (ஐங்.3: 2)

வலிமை - strength|

'ஒரு தனித்து ஒழிந்த உரனுடை

நோன் பகடு' (அகம்.107: 15)

உழவு - ploughing

'பகடு பல பூண்ட உழவுறு செஞ்

செய்' (அகம்.262: 2)

(17) முயற்சி | ஊக்கம் - effort/

'மடுத்த வாய் எல்லாம் பகடு

அன்னான் உற்ற இடுக்கண்

இடர்ப்பாடு உடைத்து'

குறள்.63: 4)

(ஊ) எருது erutu

முயற்சி - effort

'வல் வாய் உருளி கதுமென

மண்ட, அள்ளல் பட்டு, துள்ளுபு

துரப்ப, நல் எருது முயலும் அளறு

போகு விழுமத்து'

(பதி.27: 11-13)

உழவு - ploughing, agriculture

.. .. .. எருது தொழில்

செய்யாது ஓட விடும் கடன்

வேளாளர்க்கு இன்று'

(பரி. 20: 62-63)

வலிமை - strength

செருக்கெழு மன்னர்

திறலுடையார் சேர்ந்தார்

ஒருத்தரை அஞ்சி உலைதலும்

உண்டோ ? உருத்த சுணங்கின்

ஒளியிழாய்! கூரிது எருத்து

வலியநன் கொம்பு'

(பழமொழி, 271)

(18) வீரர் - soldier)

'உற்றா லிறைவற் குடம்பு

கொடுக்கிற்பான் மற்றவற்

கொன்னாரோ டொன்றுமோ? -

தெற்ற முரண்கொண்டு மாறாய

உண்ணுமோ? உண்ணா இரண்டே

றொருதுறையுள் நீர்'

(பழமொழி. 312)

(எ) கயிறரி எருத்து kayirarl eruttu

விரைவு - speed

'கயிறரி யெருத்திற் கதழுந்

துறைவன்' (குறு.117: 4)


101