பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காளை

(ஏ) காரி kari

விரைவு - speed

'... ... ... .. காற்றுப் போல் வந்த

கதவிடைக் காரியை'

(கலி, 103: 40)

சினம் - angry

'.. .. .. .. வை மருப்பின் காரி

கதன் அஞ்சான் கொள்பவன்'

(கலி. 104: 20-21)

(ஐ) சே ce

சினம் - angry

'ஓவா வேகமோடு - உருத்துத்

தன்மேல் சென்ற சேஎச்

செவிமுதற் கொண்டு'

(கலி. 103: 50-51)

வலிமை - strength

'.. .. .. .. வெந் துப்பின் சேஎய்

சினன் அஞ்சான் சார்பவன்'

கலி. 104: 24-25)

(ஓ) மூரி miri

(19) சோம்பல் - lazyness

'மடியை வியங்கொள்ளின் மற்றைக்

கருமம் முடியாத வாறே முயலும் -

கொடியன்னாய்! பாரித் தவனை

நலிந்து தொழில்கோடல் மூரி

உழுது விடல்' (பழமொழி. 167)

(20) பயனின்மை , தாழ்வு - useless, low

தொடி முன்கை நல்லாய்! அத்

தொக்க பொருளைக் குடிமகன்

அல்லான்கை வத்தல் - கடிநெய்தல்

வேரி கமழும் விரிதிரைத்

தண்சேர்ப்ப மூரியைத் தீற்றிய

புல்' (பழமொழி. 209)

(ஓ) புல்லம் pullam

(21) அரசன் - king

'நல்லவும் தீயவும் நாடிப்

பிறருரைக்கும் நல்ல பிறவும்

உணர்வாரைக் கட்டுரையின்

வல்லிதின் நாடி வலிப்பதே

புல்லத்தைப் புல்லம் புறம்புல்லு

மாறு' (பழமொழி. 261)

(ஔ) இமிலேற்றின் கண்களில்

நீர்சொரிதல் Imilerrin kankalil

nircorital)


காற்பொடி


(22) தீமை

'குடப்பால் உறையா குவி

இமிலேற்றின் மடக்கணீர் சோரும்

வருவதொன்று உண்டு' (சிலப். 17:

2.1-2)

(க) இமிலேறு எதிர்தல் Imilku

etirtal

(23) இழுக்கு, தீமை - blemish, flaw,

bad omen

'இமிலேறு எதிர்ந்தது இழுக்கென

அறியான்' (சிலப். 16: 100)

(ங) பகட்டிணை Pakattinai

(24) முயற்சி

'கவ்ற்சியில் கையற நீக்கி

முயற்சியில் குண்டுதுறை

இடுமணல் கோடுற அழுந்திய

பண்டிதுறை ஏற்றும் பகட்டிணை

போல' (பெருங். உஞ்.53: 52-54)

(ச) விடை அடர்த்தல் Vitai

atarttal (suppress bull)

(25) வெல் - win

'வார் ஆரும் முலை மடவாள்

பின்னைக்கு ஆகி வளை மருப்பின்

கடுஞ்சினத்து வந்தாள் ஆர்ந்த கார்

ஆர் திண் விடை அடர்த்து

வதுவை ஆண்ட கரு முகில் போல்

திரு நிறத்து என் கண்னர் கண்டீர்'

(நாலா.1281: 1-6)

(ஒப்பு) Ox, Bull அமைதி, அன்பு,

இரவு, இனிய பண்பு ,

உழவுத்தொழில், உழைப்பு, கடமை,

சூரியன், தர்மம், தியாகம், நிலவு,

நீதி, புனிதம், வலிமை, வளமை,

வேளாண்மை; இருள்;

துன்பப்படுதல்.

காற்பொடி Karpoti (foot's dust)

(1) இழிவு - mean

'கலிகொள் காடுதன்

காற்பொடியாகவும் கருதா"

(நீலகேசி.45: 3)

(ஆ) செருப்பு அடியின் பொடி

Ceruppu atiyin potil


102