பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிழக்குத் திசையிலிருந்து பறவை


'தூவொளி மணிமுடி முகத்த

கிம்புரி நாவளைக் கொண்டன'

(சூளா .1222: 1-2)

கிழக்குத் திசையிலிருந்து பறவை

ஒலித்தல் Kilakkut ticailiruntu

paravai olittal |

(1) தீமை, இறப்பு

'கதிரகத்து இருந்த முதிர்குரல்

பறவை போமின் வல்லே போதீர்

ஆயினும் உயிர்த்தவல் உரைக்கும்

என்பதை உணர்ந்து முந்து புள்

உரைத்த முதுமகன் கூற'

(பெருங். உஞ்.56: 231-234)

கிழங்கு Kilaiku

(1) வளமை

கிழங்கு கீழ் வீழ்ந்து, தேன் மேல்

தூங்கி, சிற்சில வித்திப் பற்பல

விளைந்து, தினை கிளி கடியும்

பெருங் கல் நாடன்' (நற்.328: 1-3)

கிள்ளை Killai (parrot)

(1) சிறப்பு

'அறம் புரி செங் கோல்

மன்னனின் தாம் நனி சிறந்தன

போலும், கிள்ளை ' (ஐங்.290: 1-2)

(ஆ) கிளி Kili

(2) இனிமை

'... .. .. .. .. கிளி எனச் சிறிய

மிழற்றும் செவ்வாய்' (அகம்.126:

17-18)

(3) மென்மை

'கிளி மழலை மென் சாயலோர்'

(பட்,150)

(4) பேசும் ஆற்றல் - prattle

'பூவையும் கிளியும் மிழற்றப்

புகுந்து' (சிவக.873:3)

(இ) பைங்கிளி Painkili

(5) நேயம் - affection

'வீணை வித்தகற் - காணிய

விண்படர்ந்து ஆணுப் பைங்கிளி

யாண்டுப் பறந்ததே' (சீவக.1002:3-

4)


குசும்பை


(ஒப்பு) Parrot அழகு, எளிதில்

பயிற்றுவிக்கத்தக்க தன்மை, பயனில்

பேச்சு, முன்னறிதிறம், வளமை

கின்னரம் Kinnaram (a legendary bird)

(1) இனிமை - sweet

'... ... ... ... .. இன்சீர்க் கின்னரம்

முரலும் அணங்குடைச் சாரல்'

(பெரும்.494)

குங்குமம் Kuikumam (saffron)

(1) மங்கலம் - auspicious

‘செங் குங்குமச் செழுஞ் சேறு,

பங்கம் செய் அகில் பல பளிதம்'

(பரி.10: 81-82)

(2) சிவப்பு நிறம்

'நிறங்கிளரும் குங்குமத்தின் மேனி

அவன் நிறமே என்கின்றாளால்'

(திருநா. தேவா.305:3-4)

(3) இன்பம் - pleasure

'குரும்பை மென்முலையின் மேல்

குலாய குங்குமம் விருந்து செய்திட

வெறி மேனி சேந்ததே' (சீவக.97:

-4)

குங்குலியம் Kurkuliyam (an incense)

(1) நறுமணம், இறப்பு - fragrance,

demise

'காலனார் உயிர் செற்றார்க்குக்

கமழ்ந்த குங்குலியத் தூபம்'

(பெரிய,841:5-6)

குச்சு Kuccu (நெய்வோர்க்குரிய

கருவி)

(1) நெருக்கம் - thick, crowd

'கோணமும் மறுகும் எல்லாஅம்

குச்சென நிரைத்தம் மாந்தர்'

(சீவக.615:3)

குசும்பை Kucumpai (a flower)

(1) நறுமணம்

'குசும்பையின் நறுமலர்ச் சுண்ணக்

குப்பையின் விசும்பையும் கடந்தது

விரிந்த தூளியே' (கம்ப.யுத்.1756:

3-4)


104