பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குடங்கருள் பாம்பொடு உடனுறைதல்


குடங்கருள் பாம்போடு உடனுறைதல்

'Kutaikarul pampotu utanuraital

(1) பொருத்தமின்மை , ஆபத்து

'உடம்பாடு இலாதவர் வாழ்க்கை

குடங்கருள் பாம்போடு உடன்

உறைந்தற்று' (குறள்.890)

குடம்பை Kutampai (nest)

(1) உடல் / தலைவி - flesh/ heroine

'அலங்கல் அம் சினைக் குடம்பை

புல்லெனப் புலம் பெயர் மருங்கில்

புள் எழுந்தாங்கு, மெய் இவண்

ஒழியப் போகி, அவர் செய்வினை

மருங்கில் செலீஇயர், என்

உயிரே!' (அகம், 113: 24-27)

(2) உடல் / நிலையாமை - body /

transient

'குடம்பை தனித்தொழிய .. .. ..'

(குறள்.338)

குடுவை Kutuvai (cup)

(1) சிறுமை - smallness

'மடுவொத்து அங்கு அதின்

வங்கமும் அன்றாய் குடுவைத்

தன்மையது - ஆயது குன்றம்'

(கம்ப.யுத்.230: 3-4)

குடை Kutai (umbrella, parasol)

(1) பாதுகாப்பு - protection

'நடைமிகுத்து ஏத்திய குடைநிழல்

மரபும்' (தொல், 1037)

(2) அருள் - grace

'அருள் குடையாக' (பரி.3:74)

(3) அறம் - virtue |

'அறன் நிழல் எனக் கொண்டாய்

ஆய்குடை; அக்குடைப் புற

நிழற்கீழ்ப் பட்டாளோ'

(கலி.99: 8-9) (4) அரசு - reign

'ஒன்பது குடையும் நன்பகல்

ஒழித்த பீடுஇல் மன்னர் போல'

(அகம்.125: 20-21)

(5) புகழ் - fame

'வீயா விழுப்புகழ் விண்தோய்

வியன்குடை' (அகம்.135: 11)

(ஆ) கவிகை Kavikai

பாதுகாப்பு / ஆதரவு - Support

குடைகளின் உள்ளே .. -


செவி கைப்பச் சொற்

பொறுக்கும் பண்புடை

வேந்தன் கவிகைக்கீழ்த்

தங்கும் உலகு' (குறள்.389)

இ) குடையோடு கோல் வீழ்தல்

Kutaiyotu kil viltal

(6) அரசன் அழிவு, தீமை - fall of

king, bad omen

'குடையொடு கோல்வீழ நின்று

நடுங்கும் கடைமணியின் குரல்

காண்பென் காணெல்லா'

(சிலப்.20: 1-3)

(உ) முக்குடையோடு தேவர்

எழுந்து கைகளைத்

தொங்கவிட்டுக் கொண்டு போக,

அதனை ஊர் மக்கள் ஓடிச்

சென்று காணுதல் Mukkutaiyotu

tevar eluntu kaikalait thonkavittuk kontu

poka, atanai or makkal otic cenru

kanutal (triple parasol and hanging

hands...)

(7) தீமை, துன்பம் - evil omen

'ஏர்கொள்முக் குடையுந் தாமும்

எழுந்துகை நாற்றிப்போக

ஊருளோர் ஓடிக் காணக்

கண்டனம் என்றுரைப்பார்'

(பெரிய 28.637)

(ஒப்பு) Umbrella, Parasol அரசு,

ஆற்றல், கடவுட்டன்மை,

செல்வம், பாதுகாப்பு,

குடை Kutai (உண்கலம்) (cup / bowl)

(1) வீண் / பயனின்மை - waste

தோள் நலம் உண்டு துறக்கப்

பட்டோர் வேள் நீர் உண்ட

குடையோர் அன்னர்'

(கலி.23.8-9)

குடைகளின் உள்ளே தேனீக்கள்

கூடுகட்டி தேன் துளிகளை

விட்டு விட்டுப் பெய்தல்

Kutaikalin ulle tehlkkal kutukatti

tén tulikalai vittu vittup peytal

(1) தீமை, தோல்வி


105 .