பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குழவி


'ஆம்பல்அம் குழலின் ஏங்கி,

கலங்கு அஞர் உறுவோள் புலம்பு

கொள் நோக்கே !' (நற்.113: 11-12)

(5) இன்பம்

‘ஆம்பலந் தீங்குழல்' (சிலப்.17)

(இ) கொன்றையம் குழல்

Konraiyam kulal

(6) இன்பம்

'கொன்றையம் தீங்குழல்'

(சிலப். 17)

(ஒப்பு) Flute, Pipe அமைதி,

அறுதல், ஆனந்த பரவசம்,

கவர்ச்சி , காற்று, தொடக்கம்,

மகிழ்ச்சி, மயக்கம், மருட்சி,

மீட்பு, முன்னறிவிப்பு, வளமை;

காமம் சார்ந்த கடுந்துயரம்,

நம்பிக்கையற்ற காதல்,

குழவி Kulavi (child, babe)

(1) அன்பு - love

'தாய் உடன்று அலைக்கும்

காலையும், வாய்விட்டு, அன்னாய்!

என்னும் குழவி போல, இன்னா

செயினும் இனிதுதலை

யளிப்பினும்' (குறு.397: 4-6)

(2) இளமை - young

'குழவி வேனில் விழவு எதிர்

கொள்ளும்' (கலி.36: 9)

(3) அருள், அன்பு - mercy, love

அருள் என்னும் அன்பு ஈன் குழவி

பொருள் என்னும் செல்வச்

செவிலியால் உண்டு ' (குறள்.757)

(ஆ) குழ Kula

(4) அறியாமை - ignorance / innocence

'மண்டாத கூறி, மழ குழக்கு

ஆகின்றே ' (கலி.108: 21)

(இ) தாயைப் பிரிந்த குழவி

Tayaip pirinta kulavi

(5) துன்பம் - Sorrow

'பண்பு இல் காவலர் தாய் பிரித்து

யாத்த நெஞ்சு அமர் குழவி போல'

(அகம்.293: 11-12)

(ஈ) தாயில் குழவி Tayil kulavi

(6) துயர் / துன்பம்


குளவி

'தாயில் தூவாக் குழவித் துயர்

கேட்டோர்' (மணி.13: 11)

(உ) தாயிலாக் குழவி Tayilak

kulavi

(7) பெருந்துன்பம்

'தாயிலாக் குழவி போலச் சாதுயர்

எய்துகின்றேன்' (சீவக.1581: 1)

(ஒப்பு) Child அறியாமை,

இளவேனில், எதிர்காலம், எளிமை,

தன் விருப்ப இயல்பு, தூய்மை,

தொடக்கம், நற்பேறு, வளமை,

விடியல்; பண்படாத நிலை,

பிறரைச் சார்ந்திருத்தல்,

குளத்துக்கயம் Kulattukkayam (a star)

(1) தீமை

... .. .. .. கடைக் குளத்துக் கயம்

காய, .. .. .. .. மேலோர் உலகம்

எய்தினன்' (புறம்.229: 1-12)

குளமீன் புகைதல் Kulamin pukaital

(smoky star)

(1) தீமை - evil omen

'குளமீனொடுந் தாள் புகையினும்'

(புறம்.395:35)

குளவி (காட்டு மல்லிகை) Kulavi

(wild jasmine)

(1) குளிர்ச்சி | தண்மை

'பெருந் தண் குளவி குழைத்த பா

அடி' (நற்.51: 8)

(2) நறுமணம்

பெருந் தண் கொல்லிச் சிறு பசுங்

குளவிக் கடி பதம் கமழுங் கூந்தல்'

(நற்.346: 9-10)

(3) இன்பம் / உவகை

'கல் இவர் இற்றி புல்லுவன ஏறிக்

குளவி மேய்ந்த மந்தி

துணையொடு வரை மிசை உகளும்

நாட!' (ஐங்.279: 1-3)

(4) இனிமை / மகிழ்ச்சி

'கழுநீர் மேய்ந்த கடவாய் எருமை

'. .. .. .. குளவிப் பள்ளிப் பாயல்

கொள்ளும் (சிறு.42,46)


110