பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறடு


குறடு Kuratu (tongs)


(1) பொய்யான அன்பு - feigned love

'முட்டிகை போல முனியாது

வைகலும் கொட்டி உண்பாரும்

குறடுபோல் கைவிடுவர்'

(நாலடி.208: 1-2)

குறள் Kural - (smallness, dwarf)

(1) குறுமை / சிறுமை

'ஆயது அங்கு ஓர் குறள் உரு ஆய்

அடி' (கம்ப.சுந்.1189: 1)

(2) ஏமாற்று - deceive

'பொல்லாக் குறள் உருவாய்'

(நாலா,611: 1)

குறிஞ்சி Kuriici

(1) மலையகம் - mountainous tract

'சேயோன் மேய மைவரை

உலகமும்' (தொல்.951)

(2) கூதிர், யாமம் - winter, mid night

'குறிஞ்சி கூதிர் யாமம் என்மனார்

புலவர்' (தொல்.952)

பனிஎதிர் பருவம் - dew season

'பனி எதிர் பருவமும் உரித்தென

மொழிப்' (தொல்.953)

(3) புணர்தல் - love life

'புணர்தல் பிரிதல் இருத்தல்

இரங்கல் ஊடல் இவற்றின்

நிமித்தம் என்றிவை தேருங்காலை

திணைக்குரிப்பொருளே'

(தொல்.960)

(4) வெட்சிப்போர் / அச்சம் - war,

fear

'வெட்சிதானே குறிஞ்சியது புறனே

உட்கு வரத்தோன்றும் ஈர்ஏழ்

துறைத்தே' (தொல்.1002)

(5) அன்பு - love -

'கருங்கோற் குறிஞ்சிப் பூக்

கொண்டு பெருந்தேன் இழைக்கும்

நாடனொடு நட்பே ' (குறு.3: 3-4)

(6) சிறப்பு | அருமை - especial, rare

'கருங் காற் குறிஞ்சி மதன் இல்

வான் பூ' (நற்.268: 3)

(7) வீரம் - valour

'குறிஞ்சிக் குன்றவர் மறம் கெழு

வள்ளி தமர்' (பரி.9: 67)

குறிஞ்சி (பண்) Kuriici

கூகை


(1) இரவு / இன்பம்

'கழுது கால் கிளர ஊர்

மடிந்தன்றே உரு கெழு மரபின்

குறிஞ்சி பாடி' (நற்.255: 1-2)

குறும்பூழ் Kurumpul (a bird)

(1) பரத்தை

'குறும்பூழ்ப் போர் கண்டேம்;

அனைத்தல்லது, யாதும்

அறிந்ததோ இல்லை, நீ வேறு

ஓர்ப்பது' (கலி.95:6-7)

(2) சிறுமை - minimal, common

'யானை வேட்டுவன் யானையும்

பெறுமே; குறும்பூழ் வேட்டுவன்

வறுங் கையும் வருமே'

(புறம்.214: 4-5)

(3) தகுதியின்மை - unworthy

'காடுறை வாழ்க்கைக் கருவிளை

மாக்களை நாடுறைய நல்கினும்

நன்கொழுகார் - நாடொறும்

கையுள தாகி விடினும்

குறும்பூழ்க்குச் செய்யுள தாகு

மனம்' (பழமொழி.96)

குன்றி Kunri (a bead)

(1) சிவப்பு நிறம்

'குன்றி ஏய்க்கும் உடுக்கை'

(குறு.கட வா.3)

(2) சிறிய அளவு / சிறுமை

'உயர்ந்து ஏந்து மருப்பின்

கொல்களிறு பெறினும், தவிர்ந்து

விடு பரிசில் கொள்ளலென்;

உவந்து நீ இன்புற விடுதி ஆயின்,

சிறிது குன்றியும் கொள்வல், கூர்

வேற் குமண!' (புறம்.159: 22-25)

(3) வேடம் - feign

‘புறம் குன்றி கண்டனையரேனும்,

அகம் குன்றி மூக்கின் கரியார்

உடைத்து' (குறள்.277)

கூகை Kukai

(1) அறிவின்மை - foolish

'மாயத்தை அறிய மாட்டேன்

மையல்கொள் மனத்தனாகிப்

பேயொத்துக் கூகையானேன்

பிஞ்ஞகா பிறப்பொன்று இல்லீ'

(திருநா தேவா. 1512: 1-4)


111