பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கூந்தல்

(ஆ) கூந்தல் கழுவுதல் Kuntal

kaluvutal (hair wash)

(6) தலைவன் வரவு - arrival of hero

'ஏகுமின் என்ற இளையர் வல்லே

இல் புக்கு அறியுநராக, மெல்லென

மண்ணாக் கூந்தல் மாசு அறக்

கழீஇ, சில் போது கொண்டு

பல்குரல் அழுத்தி ஒய அந்நிலை

புகுதலின், மெய் வருத்துறாஅ

அவிழ் பூ முடியினள்' (நற்.42: 6-11)

(இ) மண்ணாக் கூந்தல் Mannak

kintal (unwashed hair)

(7) பிரிவு - seperation

'ஏகுமின் என்ற இளையர் வல்லே

இல் புக்கு அறியுநராக, மெல்லென

மண்ணாக் கூந்தல் மாசு அறக்

கழி இ' (நற்.42: 6-8)

(ஈ) கூந்தல் கொய்தல் Kuntal

koytal (cutting hair)

(8) கைம்மை - widowhood

'ஒள் நுதல் மகளிர் கைம்மை கூர,

அவிர் அறல் கடுக்கும் அம் மென்

குவை இருங் கூந்தல் கொய்தல்

கண்டே ' (புறம்.25: 12-14)

(உ) விரிந்த கூந்தல் Virinta kintal

(spread out hair)

(9) தீமை - evil, harmful

'தளரும் நெஞ்சம் தலை இ

மனையோள் உளரும் கூந்தல்

நோக்கி களர கள்ளி நீழற் கடவுள்

வாழ்த்தி பசி படு மருங்குலை

கசிபு கைதொழாஅ காணலென்

கொல் என வினவினை வரூஉம்

பாண கேண்மதி யாணரது

நிலையே' (புறம்.260: 3-8)

(ஊ) அவிழ்குழல் Avilkintal (loose

hair)

(10) துன்பம் - woe

'துறுமலர் அவிழ்குழலாய்

துறந்தார்நாட்டு உளதாம்கொல்

மறவையாய் என்னுயிர்மேல்

வந்தஇம் மருள்மாலை (சிலப்.7:

42)


கூவல்

(எ) கூந்தல் தீப்பிடித்தல் Kuntal

tippitittal (hair catching fire)

(இராவணன் மனைவி

மண்டோதரியின் கூந்தல்

தீப்பிடித்தல்)

(11) தீமை, அழிவு, இறப்பு - evil

omen

'மன்னவன் தேவி அம் மயன்

மடந்தைதன் பின் அவிழ் ஓதியும்

பிறங்கி வீழ்ந்தன துன் அருஞ்

சுடர் சுடச் சுறுக் கொண்ட

ஏறிற்றால் இன்னல் உண்டு எனும்

இதற்கு ஏது என்பதே'

(கம்ப.சுந்.377)

(ஏ) கூந்தல் தீயில் வெந்திடுதல்

Kintal tiyil ventitutal (hair burning)

(12) தீமை, அழிவு - bad omen,

destruction

'கோயிலும் நகரமும் மட நலார்

குழலும் நம் குஞ்சியோடும்

தீயினும் வெந்திடுமலால் ஒரு

நிமித்தம் பெறும் திறனும்

உண்டோ ' (கம்ப.யுத்.107: 5-8)

(ஒப்பு) Hair அன்பு, ஆணின்

வலிமை, இனவேறுபாடு, கடவுள்

அருள், சமூக நிலை, வளமை,

வெளிப்புற - ஆன்மா.

கூந்தல் அகற்றுதல் -

சிறைப்படுத்துதல், தண்டனை,

துறவுநிலை.

தளர்வான கூந்தல் - கன்னிமை,

துயரம், தூய்மை , பாவிகள்.

விரிகூந்தல் - கீழுலகக் கடவுள்,

சிக்கல், போர்.

நீண்ட கூந்தல் - கன்னிமை,

தூய்மை, மணப்பெண்.

பொன்னிறக் கூந்தல் - சூரியக்

கதிர்கள், தூய்மை , நிலைபேறு,

நிறைவு, வளம், விவேகம்,

வெற்றி.

செந்நிறக் கூந்தல் - கீழுலகக்

கடவுளர்.

கூவல் Kival (well / spring/ fountain)

(1) நிறைவு | பயன் - fullness, use

'சுரன் முதல் வருந்திய வருத்தம் ..

' .. .. மலி சிறு கூவலின்

தணியும்' (நற்.41: 3-4)


114